தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Gemini Bridge: 50-ஆம் ஆண்டில் அண்ணா மேம்பாலம்! ஜெமினி ப்ரிட்ஜ் குறித்த அறியாத தகவல்கள்!

Gemini Bridge: 50-ஆம் ஆண்டில் அண்ணா மேம்பாலம்! ஜெமினி ப்ரிட்ஜ் குறித்த அறியாத தகவல்கள்!

Kathiravan V HT Tamil

Jul 01, 2023, 02:50 PM IST

google News
மேம்பாலத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி “இது ஜெமினி மேம்பாலம் அல்ல. அறிஞர் அண்ணா மேம்பாலம் என்று அழைக்கப்படும்” என்று அறிவித்தார்.’
மேம்பாலத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி “இது ஜெமினி மேம்பாலம் அல்ல. அறிஞர் அண்ணா மேம்பாலம் என்று அழைக்கப்படும்” என்று அறிவித்தார்.’

மேம்பாலத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி “இது ஜெமினி மேம்பாலம் அல்ல. அறிஞர் அண்ணா மேம்பாலம் என்று அழைக்கப்படும்” என்று அறிவித்தார்.’

மக்கள் மொழியில் ‘மவுண்ட் ரோடு’ என்று அழைக்கப்படும் அண்ணா சாலையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் ‘அண்ணா மேம்பாலம்’ (ஜெமினி ப்ரிட்ஜ்) கட்டிமுடிக்கப்பட்டு 50 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

1973ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதிதான் இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டபோது இந்தியாவின் மூன்றாவது மேம்பாலம் என்ற பெருமையை பெற்றுக்கொடுத்தது.

நதிகள், கால்வாய்கள் மற்றும் ரயில் பாதைகளின் குறுக்கே மேம்பாலங்கள் கட்டுவதுதான் வழக்கமான ஒன்றாக இருந்த நிலையில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாலையின் மீது கட்டப்பட்ட முதல் மேம்பாலம்தான் இந்த அண்ணா மேம்பாலம்.

அன்று தொடங்கி இன்று வரை சென்னையில் அதிகமான வாகனங்கள் அண்ணா சாலையை பிரதானமாக கொண்டே செல்கின்றன.

தேனாம்பேட்டை, தி.நகர், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கதீட்ரல் சாலை ஆகிஅய் இடங்களுக்கு செல்வதற்காக சாலைகள் கூடும் இடமாக அப்போதைய ஜெமினி ஸ்டூடியோ இருந்த பகுதி இருந்தது.

இதனால் இந்த பகுதி ’ஜெமினி சர்க்கிள்’ என்றே அழைக்கப்ப்பட்டது.

இந்த பகுதியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே 66 லட்சம் செலவில் 21 மாதங்களில் கட்டப்பட்டது.

700 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலம், 48 அடி அலகம் கொண்டது. மேம்பாலத்தில் மொத்தம் 80 தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் குதிரை பந்தையம் தடை செய்யப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக அண்ணா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இரண்டு பக்கமும் குதிரை உடன் இருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

புகழ்பெற்ற ஜெமினி ஸ்டூடியோ இடிக்கப்பட்டு தற்போது அந்த இடத்தில் ‘தி பார்க்’ ஐந்து நட்சத்திர விடுதி கட்டப்படுள்ளது.

சமீபத்திய கணக்கெடுப்பின் படி மேம்பாலத்தின் வழியாக மணிக்கு சராசரியாக 20 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன.

1973ஆம் ஆண்டு மாலையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் சாதிக்பாட்சா தலைமை தாங்க அமைச்சர் நெடுஞ்செழியன் முன்னிலை வகிக்க புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்அமைச்சர் கருணாநிதி “இது ஜெமினி மேம்பாலம் அல்ல. அறிஞர் அண்ணா மேம்பாலம் என்று அழைக்கப்படும்” என்று அறிவித்தார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி