2 Years Of DMK Govt: இரண்டு ஆண்டுகளில் இறங்கி அடித்த முதல்வர் ஸ்டாலினின் சாதனைகள்!
May 07, 2023, 05:55 AM IST
M.K.Stalin: இந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகளின் தொகுப்பை இங்கு காணலாம்.
M.K.Stalin: இந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகளின் தொகுப்பை இங்கு காணலாம்.
திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வராக பொறுப்பேற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, இந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகளின் தொகுப்பை இங்கு காணலாம்.
- ஆவடி, தாம்பரம் புதிய காவல் ஆணையரகங்கள் உருவாக்கம்
- போலீசாருக்கு வரம் ஒரு நாள் விடுமுறை அறிவிப்பு
- சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டமாக மொத்தம் 118.9 கி.மீ.,யில் 3 வழித்தடங்களுக்கு கட்டுமானப் பணி
- மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மாதாந்திர உதவித்தொகை
- வரலாற்றில் முதன்முறையாக மின்நிதிநிலை அறிக்கை வெளியிட்டது
- மதுரையில் ரூ.114 கோடியில் உயர் தொழில்நுட்பத்துடன் கலைஞர் நூலகம்
- வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை முதன்முறையாக அறிமுகம்
- தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கு வழங்கும் விருதுத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது
- முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கான பரிசுத்தொகை ரூ.1 லட்சமாக உயர்வு
- உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தியது
- கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்குள் நகைக்கடன் பெற்று நிலுவையில் இருந்த ரூ.4818.88 கோடி தள்ளுபடி
- ரூ.2755.99 கோடி மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி
- கொரோனா காலத்தில் செய்தியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வழங்கியது
- பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம்
- அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் விழா
- மின்வாரிய குறைகளை தீர்க்க ‘மின்னகம்’ என்கிற பெயரில் நுகர்வோர் சேவை தொடக்கம்
- சார்பதிவாளர் அலுவலங்கள் சனிக்கிழமையும் செயல்பட அனுமதி
- மகளிருக்கு கட்டணமில்லாத இலவச பஸ் பேருந்து சேவை
- 46 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் முறை
- தேர்வாணையத்தின் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயம்
- அனைத்து வகை ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்தது
- இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடக்கம்
இது போன்று இன்னும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியிருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள இரண்டு ஆண்டு நிறைவு சிறப்பு மலரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறை வாரியாக அவை அனைத்தையும் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து காணலாம்.
டாபிக்ஸ்