Elephant: போக்குவரத்து நெரிசலைத் தாண்டி ஓட்டலில் புகுந்த பாகுபலி - அச்சத்தில் மக்கள்
May 30, 2023, 12:55 PM IST
மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் உள்ள ஹோட்டல் வளாகத்தில் இரண்டு யானைகள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. அதன் காரணமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக மனத்தில் வசிக்கக்கூடிய வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன.
விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன. மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக பாகுபலி என்ற ஒற்றைக் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சுற்றி வருகின்றது.
திடீரென நேற்றிரவு பாகுபலி ஆணை உள்பட இரண்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து பரபரப்பாக இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலைக்கு வந்தது.
சாலையைக் கடந்த அந்த யானைகள் மறுபுறம் இருந்த உணவகத்திற்குள் புகுந்துள்ளது. காட்டுப்பகுதிக்குள் சென்று விடலாம் என நினைத்த அந்த யானைகள் உணவகத்தின் சுற்றுச்சுவரைத் தாண்டி செல்ல முயற்சி செய்துள்ளன. அங்கிருந்து அதனால் போக முடியாத காரணத்தினால் சிறிது நேரம் அங்கேயே சுற்றித் திரிந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் விரைந்து அந்த யானைகளை வனத்திற்குள் விரட்ட முயற்சி செய்தனர். பிறகு மற்றொரு பாதை வழியாக யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
இதன் காரணமாக ஊட்டி சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. திடீரென பரபரப்பாக இருக்கும் சாலையில் காட்டு யானைகள் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், சமீபகாலமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் தனியார் நிறுவனங்கள் கட்டடங்கள் கட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதி கான்கிரீட் காடாக மாறி வருகிறது.
இதன் காரணமாகவே வேறு வழியின்றி யானைகள் ஊருக்குள் நுழையும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதேசமயம் மனித - வனவிலங்கு மோதல் ஏற்படவும் அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil