தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tirukkural: ’திருக்குறளை எழுதியது கலைஞரா?’ பள்ளி கல்வி அமைச்சர் அன்பிலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Tirukkural: ’திருக்குறளை எழுதியது கலைஞரா?’ பள்ளி கல்வி அமைச்சர் அன்பிலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

HT Tamil Desk HT Tamil

Dec 13, 2023, 11:53 AM IST

google News
”முகமது பர்கான் என்ற சிறுவனிடம் இருந்து மழை நிவாரண நிதியை பெற்றுக் கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருக்குறள் புத்தக்கத்தை பரிசு அளித்து பாராட்டினார் இருந்தார்”
”முகமது பர்கான் என்ற சிறுவனிடம் இருந்து மழை நிவாரண நிதியை பெற்றுக் கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருக்குறள் புத்தக்கத்தை பரிசு அளித்து பாராட்டினார் இருந்தார்”

”முகமது பர்கான் என்ற சிறுவனிடம் இருந்து மழை நிவாரண நிதியை பெற்றுக் கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருக்குறள் புத்தக்கத்தை பரிசு அளித்து பாராட்டினார் இருந்தார்”

திருக்குறள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்துள்ள ட்விட் ஆனது சமூகவலைத்தளங்களில் விவாதப்பொருள் ஆகி உள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை பெய்த தொடர் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது இம்மாவட்டங்களில் வெள்ளம் வடிந்து இயம்பு நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அரசு நிதி வாங்கி வருகிறது. பல்வேறு தொழில்நிறுவனங்களை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகள் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்த முகமது பர்கான் என்ற சிறுவன் தனது சேமிப்பு தொகையை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தனது சேமிப்பு உண்டியல் உடன் தலைமை செயலகம் வந்தார். அச்சிறுவனிடம் இருந்து உண்டியலை பெற்றுக் கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருக்குறள் புத்தக்கத்தை பரிசு அளித்து பாராட்டினார்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்துள்ள ட்வீட் இணைய தளத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது. அதில் ’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து தனது சேமிப்புப் பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக தலைமைச் செயலகம் வருகை தந்திருந்தார் சிறுவன் முகமது பர்ஹான். சிறுவன் முகமது பர்ஹானுக்கு கலைஞர் எழுதிய திருக்குறள் நூலினைப் பரிசளித்து, அவரின் எதிர்கால கனவிற்கு வாழ்த்துகளும், நன்றிகளும் தெரிவித்தோம்.’ என பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் திருக்குறளை திருவள்ளுவர் எழுதிய நிலையில் திருக்குறளை எழுதியது கலைஞரா? என கேள்வி எழுப்பில் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

திருக்குறளுக்கு மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி உரை எழுதி உள்ள நிலையில் அவர் உரை எழுதிய திருக்குறள் நூலை சிறுவனுக்கு அளித்திருப்பதை அவர் பதிவிட்டுள்ள படங்களில் இருந்து அறிய முடிகிறது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை