தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பாஜகவில் இணைந்தார் திருச்சி சிவா எம்.பி. மகன் சூர்யா!

பாஜகவில் இணைந்தார் திருச்சி சிவா எம்.பி. மகன் சூர்யா!

Karthikeyan S HT Tamil

May 09, 2022, 01:30 AM IST

google News
திருச்சி: திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, பாஜகவில் இணைந்துள்ளார்.
திருச்சி: திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, பாஜகவில் இணைந்துள்ளார்.

திருச்சி: திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, பாஜகவில் இணைந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவராகவும், திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நன்கு அறியபட்டவர். இவரது மகன் சூர்யா சிவா திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணையப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதை மெய்பிக்கும் விதமாக திருச்சி சிவாவின் மகன் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் நேற்று இரவு இணைந்துள்ளார். அவர் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். இந்த நிகழ்வின் போது பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். கட்சியில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையையும் அவர் பெற்றுக் கொண்டார்.

பாஜகவில் இணைந்த பிறகு, "திமுக குடும்ப கட்சி பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விருப்பம்" என பாஜகவில் இணைந்ததும் சூர்யா தெரிவித்தார்.

திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் அவர்களின் மகன்களுக்கு கடந்த தேர்தலில் சீட் வாங்கிக்கொடுத்து எம்.எல்.ஏ, எம்.பி., ஆக்கியுள்ளனர். ஆனால் திருச்சி சிவா, தனது மகனை கட்சிக்குள் பெரிய அளவில் வளர்த்துவிட தயாராக இல்லை என்று திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில் அதிருப்தியில் இருந்த சூர்யா பாஜகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி