தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தரையிறங்க முடியாமல் தவிக்கும் திருச்சி சார்ஜா விமானம்! 141 பேரின் நிலைமை என்ன?

தரையிறங்க முடியாமல் தவிக்கும் திருச்சி சார்ஜா விமானம்! 141 பேரின் நிலைமை என்ன?

Suguna Devi P HT Tamil

Oct 11, 2024, 09:11 PM IST

google News
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் தொடர்ந்து 2 மணி நேரமாக தரையிறக்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டுள்ளது.

சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணி அளவில் 141 பேரை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் அந்த விமானம் டேக் ஆஃப் ஆனதும் அதன் சக்கரங்கள் உள்ளே செல்லாமல் வெளியே நீட்டிக்க கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் சில தொழில்நுட்பங்கள் காரணமாக விமானத்தை தரையிறக்க முடியாமல் உள்ளது. தொடர்ந்து 2 மணி நேரமாக விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டுள்ளது. 

அச்சப்பட தேவையில்லை 

விமானத்தில் பயணிக்கும் 141 பேரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும் தொடர்ந்து இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்து வரும் விமானத் துறை ஆளுமைகள் இது குறித்து பயப்படத் தேவையில்லை  எனவும் தெரிவித்து உள்ளனர். 

இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்களும் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளன. மேலும் விமானத்தின் எரிபொருள் காலியானால் மட்டுமே தரையிறக்க முடியம் எனத் தெரியவந்துள்ளது. வானில் வட்டமடிப்பதை நிறுத்தி தரையிறக்கும் முயற்சி தொடங்கியுள்ளது. இந்த விமானம் இரவு 8.16 மணி அளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை