TOP 10 NEWS: ’இணைப்பை மறுக்கும் ஈபிஎஸ்! மழைக்கு ரெடி எனகூறும் முதல்வர்’ இன்றைய டாப் 10 நியூஸ்!
Oct 17, 2024, 01:42 PM IST
TOP 10 NEWS: வடகிழக்கு பருவமழை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி, அதிமுக இணைப்புக்கு ஈபிஎஸ் மறுப்பு, தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்து ஆலோசனை, ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் இயக்கம், 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
தமிழ்நாட்டில் நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இதில் தெரிந்து கொள்ளலாம்
1.எந்த மழை வந்தாலும் சமாளிக்க தயார்
வருங்காலங்களில் எந்த மழை வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது. சென்னையில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிந்து விட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
2.தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டு உள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக வரும் அக்டோபர் 19ஆம் தேதி அன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் ஆலோசனை நடக்க உள்ளது.
3.53 ஆவது ஆண்டில் அதிமுக
அதிமுகவின் 53ஆம் ஆண்டு விழாவையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
4.நீக்கியவர்களை இணைக்க சொன்னார்களா? ஈபிஎஸ் மறுப்பு!
“பிரிந்து கிடக்கின்ற என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அவ்வளவுதான்.6 முக்கிய தலைவர்கள் என்னிடம் வந்து, நீக்கப்பட்டவர்களை இணைக்கச் சொன்னார்கள் என்று சொல்வது பச்சைப் பொய்” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
5.அம்மா உணவகங்களில் இலவச உணவு
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 1.08 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல்.
6.தங்கம் விலை கிடுகிடு உயர்வு
சென்னைய்ல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 7ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது.
7. 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
8. அரவக்குறிச்சி அருகே சாலை விபத்து
அரவக்குறிச்சி அருகே காஷ்மீர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் மீது ஈச்சர் லாரி மோதி கவிழ்ந்தது. பின்னால் வந்த காரும் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.
9. சாம்சாங் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்
சாம்சாங் ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் பணியாளர்கள் மீண்டும் வழக்கம் போல் பணிக்கு திரும்பினர்.
10. மீண்டும் மலை ரயில் சேவை தொடக்கம்
குன்னூர்-உதகமண்டலம் இடையே லவ்டேல் பகுதியில் தண்டவாளத்தில் இருந்து விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு இன்று வழக்கம் போல் மலை ரயில் சேவை தொடங்கி உள்ளது. தொடர் மழை காரணமாக கடந்த 2 நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது.
டாபிக்ஸ்