TOP 10 NEWS: சென்னையில் பிடிப்பட்ட கருங்குரங்குகள் முதல் நெல்லையில் பிடிபட்ட ஆயுதங்கள் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்
Oct 16, 2024, 06:59 PM IST
TOP 10 NEWS: நெல்லையில் ரவுடியிடன் துப்பாக்கி பறிமுதல், பருவமழை தவறுவது குறித்து மதுரை ஆதீனம் பேட்டி, வடகிழக்கு பருவமழை பாதிப்புகள், ஆளுநர், அரசு மீது செல்லூர் ராஜூ விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
1.ரவுடியிடம் துப்பாக்கி பறிமுதல்
நெல்லையில் நாட்டு வெடிகுண்டு உடன் பிரபல ரவுடி கண்ணபிரான் உட்பட 16 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இரண்டு கார்களில் வந்தவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள், அறிவாள்கள் பறிமுதல்.
2.பள்ளிக்கரணையில் உதயநிதி ஸ்டாலின்
பள்ளிக்கரணை – கோவிலம்பாக்கம் இடையேயுள்ள நாராயணபுரம் ஏரியின் கால்வாய்களில் படர்ந்திருந்த ஆகாய தாமரைகளை அகற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு.
3.பருவமழை தவறுவது ஏன்? - மதுரை ஆதீனம் பேட்டி
மக்களிடையே பக்தி குறைந்ததாலேயே பருவமழை தவறியது, கோயில் இடங்களில் வசிப்பவர்கள் குத்தகை கொடுக்க வேண்டும், அதை தருவதே இல்லை என மதுரை ஆதீனம் பேட்டி.
4.மழை நிவாரண பணிகளில் தமிழிசை
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் உணவு வழங்கினார்.
5.கருங்குரங்குகள் பறிமுதல்
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 4 கருங்குரங்குகள் மற்றும் 52 அபூர்வ வகை பச்சோந்திகள் பறிமுதல் செய்யபப்ட்டு உள்ளது. கடத்திலில் ஈடுபட்ட மலேசிய பெண், உயிரிணங்களை வாங்கிச் செல்லவந்த சென்னையை சேர்ந்த ந்பரை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
6.முதல்வர் நடவடிக்கையால் அகற்றம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக சென்னையில் நேற்று 13 செ.மீ மழை பெய்தும் சுங்கபாதையில் தேங்கிய நீர் அகற்றப்பட்டு உள்ளது என தமிழ்நாடு அரசு அறிக்கை.
7.வழக்கம் போல் மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் செண்டிரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையத்திற்கு நேரடியான ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.
8.அதிமுக சார்பில் உதவிக்குழு
மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விடியா திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம். எனவே தான், உதவ அதிமுக ஐடி விங் சார்பில் உதவிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்
9. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை
சென்னையில் இந்த முறை எதிர்பார்த்ததை விட குறைவாகவே மழை பெய்திருக்கிறது. இன்னும் இரு மாதங்கள் நீடிக்கக் கூடிய வடகிழக்கு பருவமழைக் காலத்தில் எதிர்பார்ப்பை விட அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அத்தகைய சூழல் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் சென்னையில் இன்னும் முடிக்கப்படாத மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு முடிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
10.ஆளுநரும் அரசும் காதலர்கள் போல் இணக்கம்
திமுக அரசும், ஆளுநரும் புதுக் காதலர்கள் போல தற்போது இணக்கமாக உள்ளனர். முதலமைச்சர் திடீரென பிரதமரை சந்திக்கிறார்; மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறார்கள். ஆளுநர் எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி, மக்களின் குறைகளை எடுத்து சொல்லுவார். ஆனால் தற்போது மாறி இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.
டாபிக்ஸ்