தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’பொன்முடி மீது சேறு வீச்சு! நிவாரணம் அறிவித்த முதல்வர்! கேள்வி எழுப்பும் அன்புமணி!’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’பொன்முடி மீது சேறு வீச்சு! நிவாரணம் அறிவித்த முதல்வர்! கேள்வி எழுப்பும் அன்புமணி!’ டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil

Dec 03, 2024, 06:55 PM IST

google News
TOP 10 NEWS: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு, மழை பாதித்த இடங்களில் முதல்வர் நிவாரணம் அறிவிப்பு, சாத்தணூர் அணை திறப்பு தொடர்பாக அன்புமணி ராமதாஸ் கேள்வி, மழை நிவாரணம் குறித்து ஈபிஎஸ் கருத்து உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
TOP 10 NEWS: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு, மழை பாதித்த இடங்களில் முதல்வர் நிவாரணம் அறிவிப்பு, சாத்தணூர் அணை திறப்பு தொடர்பாக அன்புமணி ராமதாஸ் கேள்வி, மழை நிவாரணம் குறித்து ஈபிஎஸ் கருத்து உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு, மழை பாதித்த இடங்களில் முதல்வர் நிவாரணம் அறிவிப்பு, சாத்தணூர் அணை திறப்பு தொடர்பாக அன்புமணி ராமதாஸ் கேள்வி, மழை நிவாரணம் குறித்து ஈபிஎஸ் கருத்து உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

1.மழை நிவாரணம் அறிவித்த முதல்வர்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரணம் அறிவித்து உள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், சேதமடைந்த குடிசைகளுக்கு 10 ஆயிரம், நெற்பயிர்களுக்கு 17 ஆயிரம், மானாவரி பயிர்களுக்கு 8500 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிப்பு. 

2.தமிழக அரசுக்கு ஈபிஎஸ் வேண்டுகோள் 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களை வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுக்கோள். 

3.அமைச்சர் பொன்முடி மீது சேறுவீச்சு 

அரசியல் உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசி உள்ளனர். குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த நபர் பொன்முடி மீது சேற்றை வீசி உள்ளார். எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் மக்கள் பணிகளை செய்வோம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி. 

4.பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நிவாரணம் 

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சென்னை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வர வழைத்து அக்கட்சித் தலைவர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். 

5.சென்னையில் 845 கிலோ கஞ்சா பறிமுதல் 

ஆந்திராவில் இருந்து கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட 845 கிலோ கஞ்சா அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

6.போதை பொருள் கடத்திய காவலர்கள் கைது 

சென்னையில் மெத்தமெட்டமைன் போதை பொருள் கடத்தல் வழக்கில் போதை பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆனந்தன், சமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட அசோக் நகர் காவலர் ஜேம்ஸ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை. 

7.விழுப்புரத்தில் நாளை விடுமுறை 

தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (04.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பழனி அறிவிப்பு. 

8.வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மேம்பாலம்

திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு- தொண்டைமானூர் இடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட மேம்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

9.திருண்ணாமலையில் உடல்கள் மீட்பு

திருவண்ணாமலை வ.உ.சி நகர் நிலச்சரிவில் இதுவரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலகியில் 7ஆவதாக சிறுமியின் உடலும் மீட்கப்பட்ட பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

10.தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி 

தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள விவரங்களின்படி சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 119 அடி. அதன் கொள்ளளவு 7.32 டி.எம்.சி. 30.11.2024-ஆம் நாள் காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.55 அடி. அதாவது அணை நிரம்புவதற்கு ஒன்றரை அடி நீர்மட்டமும், ஒரு டி.எம்.சிக்கும் குறைவான தண்ணீர் வந்தாலே அணை நிரம்பி பேரழிவு ஏற்பட்டிருக்கும். வினாடிக்கு 11,500 கன அடி வீதம் தண்ணீர் வந்தாலே, அதிகபட்சமாக அடுத்த 24 மணி நேரத்தில் அணை நிரம்பியிருக்கும். அத்தகைய சூழலில் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மொத்தமாக 170 செ.மீ மழை பெய்த நிலையில் பெரு வெள்ளம் ஏற்படும் என்பதை உணர்ந்து அணையிலிருந்து மக்களை பாதிக்காத வகையில் வினாடிக்கு சராசரியாக 50 ஆயிரம் கன அடி வரை தண்ணீரைத் திறந்து அணையின் நீர்மட்டத்தைக் குறைத்திருக்க வேண்டுமா, இல்லையா? இதை தமிழக அரசு செய்யாதது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி. 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி