தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தாயகம் திரும்பிய அண்ணாமலை! சாடும் ஈபிஎஸ்!' டாப் 10 நியூஸ்

TOP 10 NEWS: ’நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தாயகம் திரும்பிய அண்ணாமலை! சாடும் ஈபிஎஸ்!' டாப் 10 நியூஸ்

Kathiravan V HT Tamil

Dec 01, 2024, 08:01 PM IST

google News
8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு, 3 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட், அதிமுக மீது ஸ்டாலின் விமர்சனம், திமுக மீது ஈபிஎஸ் விமர்சனம், விழுப்புரத்தில் உதயநிதி ஆய்வு, விஜய் குறித்து அண்ணாமலை பேட்டி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு, 3 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட், அதிமுக மீது ஸ்டாலின் விமர்சனம், திமுக மீது ஈபிஎஸ் விமர்சனம், விழுப்புரத்தில் உதயநிதி ஆய்வு, விஜய் குறித்து அண்ணாமலை பேட்டி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு, 3 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட், அதிமுக மீது ஸ்டாலின் விமர்சனம், திமுக மீது ஈபிஎஸ் விமர்சனம், விழுப்புரத்தில் உதயநிதி ஆய்வு, விஜய் குறித்து அண்ணாமலை பேட்டி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

1.பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மழை எச்சரிக்கை காரணமாக திருப்பத்தூர், தருமபுரி, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க

2. 3மாவட்டங்களில் ரெட் அலார்ட் 

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 

3.அதிமுக மீது முதல்வர் விமர்சனம் 

தூங்கி வழிந்த நிர்வாகத்தால், மனித தவறுகளால் சென்னை மக்கள் அதிமுக ஆட்சி காலத்தில் தூக்கம் தொலைத்தனர். இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு ஒரு இரவில் இயல்நிலைக்கு மக்கள் திரும்பியது திமுக ஆட்சியில்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி. 

4.திமுக மீது ஈபிஎஸ் விமர்சனம் 

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றது. விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என விழுப்புரத்தில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி. 

5.உதயநிதி ஸ்டாலின் பேட்டி

மழைநின்று 3 நாட்களுக்கு பின் பயிர்சேதம் குறித்து கள ஆய்வு நடைபெறும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. 

6.திமுக அரசு மீது அண்ணாமலை விமர்சனம்

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசை கோரியது திமுக அரசுதான். சுரங்க ஒப்பந்தம் வெளியிடக் கருத்துக்களை கொடுத்ததும் திமுக அரசுதான். கடந்த 10 மாதங்களாக வெளியில் தெரியாமல் மறைத்து வைத்திருந்த திம்குக அரசு, எதிர்ப்பு வந்ததும் நாடகமாடுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம். 

7.வலுவிழ்ந்த ஃபெஞ்சல் புயல் 

கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து உள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மண்டலம் அறிவிப்பு.

8.தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம் 

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் கரையைக் கடக்கும் போது பெய்த கடுமையான மழையால் தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும், புதுவையிலும் மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் பாதிப்புகளைக் களைய மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை. 

9.தமிழக அரசு மீது அன்புமணி விமர்சனம் 

தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 4% ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களில் தகுதியான மாற்றுத்திறனாளிகளை அமர்த்த சிறப்பு ஆள்தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று வரை அத்தகைய சிறப்பு ஆள்தேர்வு நடத்தப்படவில்லை. சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு விட்டு, அவற்றை செயல்படுத்த எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை. 

10.அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவப்பு

அண்ணாமலை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் நாளை (டிச.02) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவிப்பு. 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி