தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’நாளை கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்! அதிமுக உண்ணாவிரதம்! திமுகவை விளாசும் ராமதாஸ்!’ டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’நாளை கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்! அதிமுக உண்ணாவிரதம்! திமுகவை விளாசும் ராமதாஸ்!’ டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil

Nov 29, 2024, 07:24 PM IST

google News
TOP 10 NEWS: நாளை கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல், குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சி ரத்து, ஓபிஎஸ் மீதான வழக்குக்கு தடை, யானை தந்த சிலைகள் பறிமுதல், தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம், திருப்பூரில் அதிமுக உண்ணாவிரதம்!
TOP 10 NEWS: நாளை கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல், குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சி ரத்து, ஓபிஎஸ் மீதான வழக்குக்கு தடை, யானை தந்த சிலைகள் பறிமுதல், தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம், திருப்பூரில் அதிமுக உண்ணாவிரதம்!

TOP 10 NEWS: நாளை கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல், குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சி ரத்து, ஓபிஎஸ் மீதான வழக்குக்கு தடை, யானை தந்த சிலைகள் பறிமுதல், தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம், திருப்பூரில் அதிமுக உண்ணாவிரதம்!

1.நாளை கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல், நாளை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும். ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் பேட்டி. 

2.குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சி ரத்து

ஃபெஞ்சல் புயல் காரணமாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் திருவாரூர் வருகை ரத்து.திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் தலைமையேற்று பட்டங்களை வழங்க இருந்தார்.

3.அடுத்த 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை 

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். சென்னை புறநகர் பகுதியில் நாளை ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி. 

4.பன்னீர் செல்வம் மீதான வழக்குக்கு தடை

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது. முன்னதாக ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு 12 ஆண்டுகள் கழித்து தாமாக முன் வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறு விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தார். 

5.திருமங்கை ஆழ்வார் சிலை மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சவுந்தராஜ பெருமாள் கோயிலில் இருந்து 1957ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை விரைவில் மீட்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் இருந்து சிலை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கையால் சிலையை திருப்பி தர ஆக்ஸ்போர்டு ஒப்புதல் அளித்து உள்ளது. 

6.யானை தந்த சிலைகள் பறிமுதல் 

விழுப்புரத்தில் 6.50 கோடி மதிப்பிலான யானை தந்தத்திலான பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான ஒரு பெண் உள்பட 3 பேரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க வனத்துறைக்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி.

7.ஆலோசனை கூட்டம் குறித்து ஈபிஎஸ் பதில் 

கருத்துக்களை பரிமாறுவதே ஆலோசனை கூட்டம். விருந்து சாப்பிட்டு போவதற்கு பெயர் ஆய்வு கூட்டம் இல்லை. அதிமுக ஆரோக்கியமான கட்சி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில். 

8.திருப்பூரில் அதிமுக உண்ணாவிரதம் 

திருப்பூரில் டிசம்பர் 3ஆம் தேதி அன்று அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். சொத்து, குடிநீர் வரி உயர்வு, வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பதை கண்டித்து டிசம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிப்பு. 

9.எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து, சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தலின் போது, தேர்தல் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எம் ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 12 அதிமுகவினர் மீது வழக்கு தொடரப்பட்டது.

10.தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம் 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூவரை கொடூரமாக படுகொலை செய்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கேட்பவர்களின் இதயத்தை நடுங்கச் செய்யும் இத்தகைய கொலைகள் கண்டிக்கத்தக்கவை. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கொடூரமாக படுகொலை செய்து நகைகளை கொள்ளையடிக்கும் அளவுக்கு தமிழகத்தில் நிலைமை மோசமடைந்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி