விபத்தில் சிக்கிய தமிழர்கள் முதல் மீண்டும் பிதற்றிய திண்டுக்கல் சீனிவாசன் வரை.. இன்றைய இரவு டாப் 10 செய்திகள்
Oct 23, 2024, 10:16 PM IST
விபத்தில் சிக்கிய தமிழர்கள் முதல் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு எழுதாதவர்களும் மருத்துவர் என பிதற்றிய திண்டுக்கல் சீனிவாசன் வரை இன்றைய இரவு டாப் 10 செய்திகள் குறித்து பார்ப்போம்
விபத்தில் சிக்கிய தமிழர்கள் முதல் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு எழுதாதவர்களும் மருத்துவர் என பிதற்றிய திண்டுக்கல் சீனிவாசன் வரை இன்றைய இரவு டாப் 10 செய்திகள் குறித்து பார்ப்போம்
விபத்தில் சிக்கிய தமிழர்கள் முதல் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு எழுதாதவர்களும் மருத்துவர் என பிதற்றிய திண்டுக்கல் சீனிவாசன் வரை இன்றைய இரவு டாப் 10 செய்திகள் குறித்து பார்ப்போம்.
- சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் வணிக நிறுவனங்கள் பார்கிங் வசதியை உறுதி செய்ய வேண்டும் என்றும்; போக்குவரத்துக்கு இடையூறாக கடையின் முன்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் போக்குவரத்து உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தீபாவளிப் பண்டிகையை ஒட்டி கோவை மாநகரில் நள்ளிரவு 1 மணி வரை வியாபாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோரும் தங்கள் அன்றாட பணி பாதிக்காத வகையில் அலுவலக நேரம் முடிந்த பிறகு, இரவில் கடைவீதிகளுக்குச் சென்று தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிச்செல்வதற்கு வசதியாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் வியாபார நேரத்தை அதிகரித்து கூடுதலாக இரவு 1 மணி வரை செயல்படத்தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதிமுக ஆட்சியில் 7.5 இட ஒதுக்கீட்டால், நீட் தேர்வு எழுதாதவர்களும் இலவசமாக மருத்துவர் ஆகலாம் என்ற உத்தரவு மூலம், 5 ஆண்டுகளில் 5,000 பேரை ஒரு பைசா செலவில்லாமல் மருத்துவர் ஆக்கியவர் எடப்பாடி பழனிசாமி என்று திண்டுக்கல்லில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் பலர் அதிர்ச்சியாகினர்.
எலும்பு முறிந்த நிலையில் சிக்கிய ரவுடி:
- கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான சுரேஷ் என்பவர் கொலை முயற்சி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிடிக்கும் போது தப்பி ஓட முயன்ற நிலையில் கீழே விழுந்து கால் எலும்பு முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
- கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழ்நாடு காவல்துறையில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, சிபிசிஐடி சிறப்பு விசாரணைப் பிரிவின் ஐ.ஜியாக அனிசா ஹுசைன் மற்றும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் எஸ்.பி.யாக சர்வேஷ் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- சென்னை வில்லிவாக்கத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஒரே நேரத்தில் 823 பயணிகள் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் அடுத்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 16 பெட்டிகள் கொண்ட ஒரு ரயில் தயாரிக்க மொத்தம் ரூ.120 கோடி செலவாகியுள்ளதாக ஐசிஎப் பொது மேலாளர் சுப்பா ராவ் கூறியுள்ளார்.
யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் நடவடிக்கை:
- யூடியூபர் இர்ஃபானின் மனைவிக்கு பிரசவம் பார்த்த ரெயின்போ மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10 நாட்களுக்கு தடை விதித்ததுடன், ரூ.50 ஆயிரம் விதித்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம் நடிவடிக்கை எடுத்துள்ளது.
- சென்னையில் வீட்டையே ஆய்வகமாக மாற்றி மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரித்த கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வெளியே வாங்கிய போதைப்பொருள் தரமில்லாததால் செளகார்பேட்டையில் வேதிப்பொருட்கள் வாங்கி, வேதியியல் படித்து வரும் மாணவரின் உதவியுடன் வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்துள்ளதால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
- பெங்களூருவில் கனமழையால் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்த 8 பேரில் 2 பேர் தமிழர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிகண்டன், சத்யராஜ் இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டாபிக்ஸ்