தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: இந்தியாவில் மங்கி பாக்ஸ் தொற்று உறுதி! விஜய் மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி! இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: இந்தியாவில் மங்கி பாக்ஸ் தொற்று உறுதி! விஜய் மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி! இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil

Sep 08, 2024, 07:55 PM IST

google News
TOP 10 NEWS: இந்தியாவில் எம்-பாக்ஸ் தொற்று உறுதி, விஜய் அரசியல் மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி, நடிகர் சங்க பொதுக்குழு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
TOP 10 NEWS: இந்தியாவில் எம்-பாக்ஸ் தொற்று உறுதி, விஜய் அரசியல் மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி, நடிகர் சங்க பொதுக்குழு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: இந்தியாவில் எம்-பாக்ஸ் தொற்று உறுதி, விஜய் அரசியல் மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி, நடிகர் சங்க பொதுக்குழு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

1.மங்கி பாக்ஸ் தொற்று உறுதி

இந்தியாவில் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

2.விஜய் அரசியல் மாநாட்டுக்கு அனுமதி

விஜய் நடத்தும் முதல் அரசியல் மாநாட்டுக்கு 33 நிபந்தனைகள் உடன் விழுப்புரம் காவல்துறை அனுமதி. 50 ஆயிரம் பேர் வருவார்கள் என குறிப்பிட்டு உள்ளதால் அத்தனை பேருக்கு மட்டும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி. 

3.நடிகர் சங்க கடனை அடைக்க நிகழ்ச்சி

நடிகர் சங்க கடனை அடைப்பதற்கான நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் கலந்து கொள்வதாக நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் கார்த்தி பேச்சு.

4.நடிகர் சங்க பதவிக்காலம் நீட்டிப்பு

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்க பொதுக்குழுவில் தீர்மானம்.

5.பாலியல் புகார் குறித்து பேச வேண்டாம்

பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம் என நடிகர் சங்க விசாக கமிட்டி தலைவர் ரோகிணி பேச்சு. புகார் மீதான குற்றம் நிரூபனம் ஆனால் 5 ஆண்டுகள் நடிக்க தடை விதிக்கப்படும் என்று உறுதி. 

6.திமுக அரசு இனத்தின் அரசு - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் நடப்பது ஒரு கட்சியின் அரசு அல்ல; ஒரு இனத்தின் அரசு. தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் தாய் வீடாக தமிழ்நாடு உள்ளது என சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

7.வெள்ளை அறிக்கை கேட்கும் ஈபிஎஸ்

திமுக ஆட்சியில் எத்தனை தொழிற்சாலைகள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

8.மகா விஷ்ணு மீது மீண்டும் ஒரு வழக்கு

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார் பதிவு.

9.மகா விஷ்ணு வாக்குமூலம்

மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்தும் வகையிலேயே பேசியதாக மகாவிஷ்ணு வாக்குமூலம்.

10.ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் 

விடுமுறை நாள் முடிந்து பலரும் சென்னை திரும்புவதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி