தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: 4 மாவட்டங்களில் ரெட் அலார்ட் முதல் புது காதலர்கள் என்ற செல்லூர் ராஜூ விமர்சனம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: 4 மாவட்டங்களில் ரெட் அலார்ட் முதல் புது காதலர்கள் என்ற செல்லூர் ராஜூ விமர்சனம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil

Oct 16, 2024, 02:22 PM IST

google News
4 மாவட்டங்களில் ரெட் அலார்ட், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி, ஆளுநர் மீது செல்லூர் ராஜு விமர்சனம், காற்றழுத்த தாழ்வுநிலை நகர்வு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு!
4 மாவட்டங்களில் ரெட் அலார்ட், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி, ஆளுநர் மீது செல்லூர் ராஜு விமர்சனம், காற்றழுத்த தாழ்வுநிலை நகர்வு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு!

4 மாவட்டங்களில் ரெட் அலார்ட், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி, ஆளுநர் மீது செல்லூர் ராஜு விமர்சனம், காற்றழுத்த தாழ்வுநிலை நகர்வு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு!

உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

4 மாவட்டங்களில் இன்றும் ரெட் அலார்ட்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பிற்பகல் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

2.காற்றழுத்த தாழ்வு மண்டலம் 

வங்ககடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. முன்னதாக 12 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது 15 கி.மீ ஆக அதிகரித்து உள்ளது. இது புதுச்சேரி - நெல்லூர் இடையே நாளை அதிகாலை சென்னைக்கு அருகே கரையை கடக்க வாய்ப்பு. 

3. அம்மா உணவகங்களில் இலவச உணவு 

அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. 

4. மழைநீர் வடிகால் பணிகள் பலன் தந்து உள்ளது 

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நல்ல பலனை கொடுத்து உள்ளன என மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி. 

5. கூடுதலாக ஆவின் பால் விற்பனை 

சென்னையில் அக்டோபர் 15ஆம் தேதியான நேற்று ஒரே நாளில் மட்டும் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை ஆகி உள்ளதாகவும், சென்னையில் தினசரி சராசரியாக 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகும் நிலையில் கூடுதால 1.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை ஆனதாக ஆவின் நிர்வாகம் தகவல்.

6.ஈபிஎஸ்க்கு உதயநிதி ஸ்டாலின் பதில் 

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி இருந்த நிலையில், ’சென்னையில் தண்ணீர் நிற்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கைதான்’ என துணை  முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில். 

7.மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் 

சென்னை மாநகராட்சியில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து பணியாளர்களும் களத்தில் உள்ளனர். புளியந்தோப்பு, பட்டாளம் பகுதிகளில் தாழ்வான பகுதி என்பதால் தண்ணீர் தேங்கி உள்ளது என மேயர் பிரியா பேட்டி.

8.அதிமுக சார்பில் உதவிக்குழு 

மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விடியா திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம். எனவே தான், உதவ அதிமுக ஐடி விங் சார்பில் உதவிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்

9. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை

சென்னையில் இந்த முறை எதிர்பார்த்ததை விட குறைவாகவே மழை பெய்திருக்கிறது. இன்னும் இரு மாதங்கள் நீடிக்கக் கூடிய வடகிழக்கு பருவமழைக் காலத்தில் எதிர்பார்ப்பை விட அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அத்தகைய சூழல் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் சென்னையில் இன்னும் முடிக்கப்படாத மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு முடிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை. 

10.ஆளுநரும் அரசும் காதலர்கள் போல் இணக்கம்

திமுக அரசும், ஆளுநரும் புதுக் காதலர்கள் போல தற்போது இணக்கமாக உள்ளனர். முதலமைச்சர் திடீரென பிரதமரை சந்திக்கிறார்; மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறார்கள். ஆளுநர் எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி, மக்களின் குறைகளை எடுத்து சொல்லுவார். ஆனால் தற்போது மாறி இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி