தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: அமைச்சரவையில் 3ஆம் இடம் பிடித்த உதயநிதி முதல் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உத்தரவு வரை!

TOP 10 NEWS: அமைச்சரவையில் 3ஆம் இடம் பிடித்த உதயநிதி முதல் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உத்தரவு வரை!

Kathiravan V HT Tamil

Sep 30, 2024, 08:09 PM IST

google News
TOP 10 NEWS: அமைச்சரவையில் உதயநிதிக்கு 3ஆம் இடம், இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உத்தரவு, செந்தில் பாலாஜி ஆஜர் ஆக உத்தரவு, செந்தில் பாலாஜி மீது ராமதாஸ் விமர்சனம், மெரினாவில் சிவப்பு எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
TOP 10 NEWS: அமைச்சரவையில் உதயநிதிக்கு 3ஆம் இடம், இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உத்தரவு, செந்தில் பாலாஜி ஆஜர் ஆக உத்தரவு, செந்தில் பாலாஜி மீது ராமதாஸ் விமர்சனம், மெரினாவில் சிவப்பு எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: அமைச்சரவையில் உதயநிதிக்கு 3ஆம் இடம், இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உத்தரவு, செந்தில் பாலாஜி ஆஜர் ஆக உத்தரவு, செந்தில் பாலாஜி மீது ராமதாஸ் விமர்சனம், மெரினாவில் சிவப்பு எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

1.உதயநிதிக்கு 3ஆம் இடம் 

தமிழ்நாடு அமைச்சர் அவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3ஆவது இடம் வழங்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடத்திலும். அமைச்சர் துரைமுருகன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 4ஆவது இடத்தில் கே.என்.நேரு, 5ஆவது இடத்தில் ஐ.பெரியசாமி, 6ஆவது இடத்தில் பொன்முடி ஆகியோர் உள்ளனர். 

2.மெரினாவில் சிவப்பு எச்சரிக்கை 

அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விமானப்படை அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒருபகுதியாக வான்சாகச நிகழ்ச்சி மெரினாவில் நடைபெற உள்ளது. விமான படை சாக நிகழ்ச்சிக்கான ஒத்திக்கை நடக்க உள்லதால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

3.முதலிடத்தில் தமிழ்நாடு 

நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அடுத்த 4 இடங்களை பிடித்து உள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 

4.அதிமுக ஆட்சியை விட அதிக கடன்கள் 

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வழங்கியதை விட திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக கடன் உதவி அளித்து உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். 

5.இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க உத்தரவு

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் வெளியாகும் பிரபல தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் மன்னிப்பு கேட்பதாக விளம்பரம் வெளியிட வேண்டும் என இயக்குநர் மோகன் ஜிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. 

6.டாடா ஆலை விரிவாக்கம் 

ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் உற்பத்தி ஆலை 3699 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

7.செந்தில் பாலாஜி ஆஜர் ஆக உத்தரவு 

அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் அக்டோபர் 4ஆம் தேதி அன்று ஆஜர் ஆக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 14ஆம் தேதி விசாரணையை ஒத்திவைக்க கோரிய செந்தில் பாலாஜியின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு உள்ளது. 

8.செந்தில் பாலாஜி மீது ராமதாஸ் விமர்சனம் 

செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது என்று புகழ்ந்துரைத்தது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், இப்போது அதற்கு பொழிப்புரை எழுதியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 15 மாத சிறை தண்டனை அனுபவித்தது தான் செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் முதலமைச்சர் விளக்கமளித்திருக்கிறார். பல் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த ஒருவரை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இந்த அளவுக்கு இறங்கிச் சென்று பாதுகாக்க முயல்வதும், போற்றுவதும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது என மருத்துவர் ராமதாஸ் கருத்து.

9.வஃக்பு வாரிய சட்டம் குறித்து அன்புமணி கருத்து 

இஸ்லாமிய மத நலன் மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக கொடையாக வழங்கப்பட்ட சொத்துகளை நிர்வாகம் செய்வதற்கான வக்ஃப் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கான முன்வரைவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், சட்டத்திருத்த முன்வரைவு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு சென்னையில் இன்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்துகளைக் கேட்கிறது. மத்திய அரசின் ஆக்கப்பூர்வமான இந்த நடவடிக்கை வக்ஃப் தொடர்பான பயனுள்ள நடவடிக்கையாகவும் அமைவதை நாடாளுமன்றக் குழு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கருத்து.

10.சென்னையில் போக்குவரத்து மாற்றம் 

சென்னையில் வரும் அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்

டாபிக்ஸ்

அடுத்த செய்தி