தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: சாம்சாங் போராட்டம் வாபஸ் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வரை! டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: சாம்சாங் போராட்டம் வாபஸ் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வரை! டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil

Oct 15, 2024, 07:51 PM IST

google News
TOP 10 NEWS: சாம்சாங் போராட்டம் வாபஸ், தமிழ்நாட்டில் பரவலாக மழை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை, தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
TOP 10 NEWS: சாம்சாங் போராட்டம் வாபஸ், தமிழ்நாட்டில் பரவலாக மழை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை, தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: சாம்சாங் போராட்டம் வாபஸ், தமிழ்நாட்டில் பரவலாக மழை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை, தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

1.சாம்சங் போராட்டம் வாபஸ்

அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாம்சாங் தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக சிஐடியு அறிவிப்பு. 

2.பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. 

3.3 இடங்களில் அதிகனமழை பதிவு 

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் கோழவரம், செங்குன்றம், ஆவடி ஆகிய மூன்று பகுதிகளில் அதிகனமழை பதிவாகி உள்ளது. 

4. 4 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல். 

5.தமிழக அரசு மீது ராமதாஸ் விமர்சனம்

சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை. சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்? என்ற அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு.

7.கழக வெற்றிக்காக உழைக்கிறேன்

இன்னும் 1½ ஆண்டுகளில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சியை, புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியை மலரச் செய்வதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவுதர மக்கள் தயாராகிவிட்டார்கள். நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது. எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026-ல் கழகத்தின் ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது. அதற்கு, எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உங்களின் உயர்வுக்காகவும், கழகத்தின் வெற்றிகாகவும் என்னையே அர்ப்பணித்து உழைத்து வருகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.

8.கன்னியாகுமரிக்கு புதிய பொறுப்பாளர்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு தற்காலிக பொறுப்பாளராக குமரி மேற்கு மாவட்டச் செயலாளர் ஜாண்தங்கத்தை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

9.மக்களுக்கு பாமக தொண்டர்கள் உதவ வேண்டும்

ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இடர்ப்பாட்டுக் காலங்களில் மக்களுக்கு உதவ வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சியின் கடமை. அதன்படி மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இயன்றவரை அனைத்து வழிகளிலும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கும் பா.ம.க.வினர் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள்.

10.உயிர்சேதம் கூடாது

"கனமழை காலங்களில் உயிர்சேதம் ஏற்படாத அளவுக்கு மின் விநியோகம் செய்வது முக்கியம்.. பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை