தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’பதவி ஏற்பு விழாவுக்கு வராத Ptr முதல் அமைச்சர்கள் பதவி ஏற்பு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: ’பதவி ஏற்பு விழாவுக்கு வராத PTR முதல் அமைச்சர்கள் பதவி ஏற்பு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil

Sep 29, 2024, 07:31 PM IST

google News
TOP 10 NEWS: புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு, அமைச்சரவை பதவி ஏற்புக்கு வராத பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர்களுக்கு ராமதாஸ் வாழ்த்து உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
TOP 10 NEWS: புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு, அமைச்சரவை பதவி ஏற்புக்கு வராத பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர்களுக்கு ராமதாஸ் வாழ்த்து உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு, அமைச்சரவை பதவி ஏற்புக்கு வராத பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர்களுக்கு ராமதாஸ் வாழ்த்து உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

1.புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு 

தமிழக அமைச்சரவையில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி.செழியன் ஆகியோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

2.அமைச்சர்களும் துறைகளும்! 

தமிழக அமைச்சரவையில் இடம் பெற்று உள்ள செந்தில் பாலாஜிக்கு மதுவிலக்கு, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைகள் துறையும், நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், கோவி.செழியனுக்கு உயர்க்கல்வித்துறையும், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு சுற்றுலாதுறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

3.மழைநீர் கால்வாயில் விழுந்து உயிரிழப்பு 

சென்னை அசோக் நகரில் சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் உயிரிழப்பு. 

4.பதவி ஏற்பு விழாவுக்கு வராத பிடிஆர்

அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் பங்கேற்கவில்லை. மதுரையில் விமானம் தாமதம் ஆனதன் காரணமாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், லண்டன் சென்று உள்ளதால் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

5.உதயநிதி ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்து 

துணை முதலமைச்சராக பொறுப்பேற்று உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திரையுலகம் மற்றும் தொழில்துறையில் இருப்பவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

6. திமுகவுக்கு அதிமுக கண்டனம்

மத்திய அரசு உத்தேசித்து உள்ள வஃக்பு வாரிய திருத்த சட்டமசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு பெரும்பாலான இஸ்லாமியர் நலம் காக்கும் அமைப்புகளை அழைக்காமல் திரு. ஸ்டாலினின் திமுக அரசு புறக்கணித்துள்ளது இஸ்லாமிய மக்களுக்கு செய்துள்ள துரோகமாகும். இந்த அரசின் ஓர வஞ்சனை செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துக்களை நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்தில் எடுத்துரைக்க வாய்ப்பளிக்காத திரு. ஸ்டாலினின் திமுக அரசிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஈபிஎஸ் அறிக்கை.

7. அமைச்சரவை மாற்றம் குறித்து மருத்துவர் ராமதாஸ் கருத்து

தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புதல்வர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.இராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக செந்தில் பாலாஜி, முனைவர் கோவி.செழியன், பனைமரத்துப்பட்டி இராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். புதிய வாய்ப்பு பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

8. போக்குவரத்துத்துறை மீது அன்புமணி விமர்சனம்

தமிழ்நாட்டில் 2000&க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உள்ளிட்ட 6247 அரசு ஊர்திகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்து காலாவதியாகி விட்ட அந்த ஊர்திகளின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்தால் ஏராளமானோர் வாழ்வாதாரம் இழப்பார்கள் என்பதால், அவற்றை மேலும் ஓராண்டுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சாலைகளில் இயக்கத்த குதியற்ற பேருந்துகளை தொடர்ந்து இயக்க அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து.

9.புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து 

புதியதாக பொறுப்பு ஏற்று உள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

10.செயல்பாடுகள் மூலம் பதிலடி தருவேன்

துணை முதலமைச்சர் ஆக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களில் மரியாதை, விமர்சனங்களுக்கு தனது பணி மூலம் பதிலடி தருவேன் என பேட்டி.

 

 

 

 

 

 

 

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி