தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: முரசொலி செல்வம் இறப்பு முதல் தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்

TOP 10 NEWS: முரசொலி செல்வம் இறப்பு முதல் தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை வரை! இன்றைய டாப் 10 நியூஸ்

Kathiravan V HT Tamil

Oct 10, 2024, 07:42 PM IST

google News
TOP 10 NEWS: முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியர் முரசொலி செல்வம் மரணம், தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, நீட் விவகாரம் தொடர்பாக ஈபிஎஸ் விமர்சனம், தமிழ்நாட்டுக்கு நிதியை விடுவித்த மத்திய அரசு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
TOP 10 NEWS: முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியர் முரசொலி செல்வம் மரணம், தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, நீட் விவகாரம் தொடர்பாக ஈபிஎஸ் விமர்சனம், தமிழ்நாட்டுக்கு நிதியை விடுவித்த மத்திய அரசு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியர் முரசொலி செல்வம் மரணம், தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, நீட் விவகாரம் தொடர்பாக ஈபிஎஸ் விமர்சனம், தமிழ்நாட்டுக்கு நிதியை விடுவித்த மத்திய அரசு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

1.முரசொலி செல்வம் மறைவு 

மாரடைப்பால் காலமான எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான முரசொலி செல்வத்தின் உடல் பெங்களூருவில் இருந்து சென்னை கோபாலபுரம் இல்லம் கொண்டு வரப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

2.முரசொலி செல்வத்திற்கு ரஜினி இரங்கல் 

முரசொலி செல்வம் என்னுடைய நீண்ட கால நண்பர்; அருமையான மனிதர்; அவரது மறைவு வருத்தம் அளிக்கின்றது. முரசொலி செல்வத்தின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என நடிகர் ரஜினி காந்த் ட்வீட். 

3.தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் ஒரு வாரத்திற்கு மேல் மிதமான மழை தொடரும். வரும் அக்டோபர் 14 ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி.

4.மதுவிலக்கு கோறும் வேல் முருகன் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனது வைத்தால் ஒரு சொட்டு மது இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க முடியும். திமுக, அதிமுகவை சேர்ந்த பண முதலாளிகள்தான் மது ஆலையை நடத்துகின்றனர் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி. 

5.வடலூர் சர்வதேச மையம் குறித்து உத்தரவு 

வடலூர் வள்ளலார் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ளலாம்; கோயிலுக்கு பின்னால் உள்ள பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ள கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

6.சாம்சங் போராட்டத்திற்கு சீமான் ஆதரவு 

சாம்சங் நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் அரசு, போராடும் தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்; போராட்டக்காரர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும்; தொழிலாளர் நலனை பாதுகாக்க தொழிற்சங்கம் தேவை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு. 

7.தமிழ்நாட்டுக்கு மத்திய நிதி விடுவிப்பு 

மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 173 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்து உள்ளது. தமிழ்நாட்டுக்கு 7 ஆயிரத்து 268 கோடி ரூபாயும், பீகாருக்கு 17 ஆயிரத்து 921 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டு உள்ளது. 

8.உதயநிதி ஸ்டாலின் மீது ஈபிஎஸ் விமர்சனம் 

திமுகவின் வெற்று அறிவிப்பால் விலை மதிப்பு இல்லாத உயிர்களை இழந்து வருகிறோம்; 21 மாத காலம் ஆகியும் இதுவரை உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை வெளியிடவில்லை என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. 

9.மீனவர் கைதுக்கு பாமக கண்டனம் 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 21 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களின் 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை. 

10.தீபாவளி போன்ஸ் அறிவிப்பு 

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை அறிவித்துள்ளது தமிழக அரசு. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சம் ரூ.16,800-ஐ போனஸ் ஆக பெறுவர். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி