தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: சதம் அடித்த வெயில்! எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடைக்கு மீண்டும் சீல்! ராமதாஸ் கண்டனம்! டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: சதம் அடித்த வெயில்! எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடைக்கு மீண்டும் சீல்! ராமதாஸ் கண்டனம்! டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil

Sep 21, 2024, 07:38 PM IST

google News
TOP 10 NEWS: தமிழ்நாட்டில் சதம் அடித்த வெயில், 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை, பொன்னேரி எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சீல், தவெக மாநாட்டுக்கு விஜய் தரப்பில் பதில், ஆவின் நெய் குறித்து சேகர்பாபு விளக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
TOP 10 NEWS: தமிழ்நாட்டில் சதம் அடித்த வெயில், 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை, பொன்னேரி எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சீல், தவெக மாநாட்டுக்கு விஜய் தரப்பில் பதில், ஆவின் நெய் குறித்து சேகர்பாபு விளக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: தமிழ்நாட்டில் சதம் அடித்த வெயில், 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை, பொன்னேரி எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சீல், தவெக மாநாட்டுக்கு விஜய் தரப்பில் பதில், ஆவின் நெய் குறித்து சேகர்பாபு விளக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

1.தமிழ்நாட்டில் சதம் அடித்த வெயில் 

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி பாரான்ஹீட் வெயில் பதிவானது. பாளையங்கோட்டை மற்றும் ஈரோட்டில் 102 டிகிரி பாரன்ஹீட், கரூரில் 100 டிகிரி பாரன்ஹீட், தூத்துக்குடியில் 99 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. 

2.தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை 

அடுத்த 3 மணி நேரத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 

3.தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி தமிழ்நாடு மீனவர்கள் 37 பேரை 3 படகுகள் உடன் இலங்கை கடற்படை சிறைப்படித்தது. நாகை, மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 37 மீனவர்களையும் காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு அசைத்துச் சென்றனர். 

4.எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணிக்கு சீல் 

பொன்னேரி பகுதியில் உள்ள எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கொடுங்கையூரில் உள்ள உணவகத்திற்கு ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட நிலையில், இந்த உணவகத்தில் சாப்பிட்ட 10 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நடவடிக்கை. 

5.தவெக மாநாட்டிற்கு பதில் அளித்த ஆனந்த்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெறும் மாநாடு தொடர்பாக காவல்துறை எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் பதில் அளித்து உள்ளது. காவல்துறை விதித்த 32 நிபந்தனைகளுக்கான பதில் கடித்தை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புதுவை என். ஆனந்த் வழங்கினார். 

6.மருத்துவத் துறையில் சாதனை 

மருத்துவத் துறைக்கு கடந்த 3 ஆண்டுகளில் 545 விருதுகள் கிடைத்து உள்ளன. 2012-2021 வரை 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு 79 விருதுகள் மட்டுமே கிடைத்து உள்ளன என தமிழ்நாடு அரசு பெருமிதம். 

7.ஆவின் நெய் குறித்து சேகர்பாபு பேட்டி 

தமிழக கோயில்களுக்கு ஆவின் மூலம் மட்டுமே நெய் வாங்க வேண்டும் என்று 2021ஆம் ஆண்டு உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் நெய் பயன்படுத்தப்படுவது தொடர்பாக விஷம தகவல்கள் பரப்பிய வினோஜ் செல்வம் மீது புகார் தரப்பட்டு உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி. 

8.மனோவின் மகன்களுக்கு ஜாமீன் 

சிறுவன் உள்ளிட்டோரை தாக்கிய புகாரில் பின்னணி பாடகர் மனோவின் மகன்களுக்கு 30 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை உடன் பூந்தமல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது. 

9.மருத்துவர் ராமதாஸ் கண்டிப்பு

தமிழ்நாட்டில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின்படி, ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப் பட்டவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியும், அவமரியாதையும் சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் தொடர்கின்றன. அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சரி செய்ய வேண்டிய தமிழக அரசு, அனைத்து அவமதிப்புகளையும், அநீதிகளையும் மூடி மறைக்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து.

10.அரசு மீது அன்புமணி விமர்சனம்

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 இளைஞர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் 5,08,055 இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இந்த அளவுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால், இந்த புள்ளிவிவரங்கள் தொடர்பான ஐயங்களை பலமுறை கேட்டும் தமிழக அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி