TOP 10 NEWS: மோகன் ஜியை தூக்கிய போலீஸ்! பிரதமருக்கு கடிதம் எழுதிய ராமதாஸ்! இன்றைய டாப் 10 நியூஸ்!
Sep 24, 2024, 01:52 PM IST
பழனி பஞ்சாமிர்தம் விவகாரத்தில் இயக்குநர் மோகன் ஜி கைது, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ராமதாஸ், அமைச்சரவை மாற்றம் குறித்து பேசிய முதலமைச்சர், உச்சம் தொட்ட தங்கம் விலை, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
1.அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் பேட்டி
அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி. வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதே வெள்ளை அறிக்கை போன்றதுதான் என்றும் கருத்து.
2.இயக்குநர் மோகன் ஜி பேட்டி
பழனி பஞ்சாமிரதத்தில் கருத்தடை மருந்துகள் கலக்கப்பட்டதாக செவிவழியே கேள்விப்பட்டு உள்ளேன் என்று பேட்டி அளித்த இயக்குநர் மோகன் ஜி காவல்துறையினரால் கைது.
3.உச்சம் தொட்ட தங்கம் விலை
நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை சவரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. அமெரிக்காவில் கடன் வட்டி விகிதங்கள் குறைந்ததால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்து உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 56 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை.
4.திமுகவை கிண்டல் அடிக்கும் தமிழிசை
தமிழக அமைச்சரவை மாற்றம் உதயநிதிக்கு ஏற்றமாகவும், துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும். உதயநிதி ஸ்டாலினுக்கு முடி சூட்டுவதற்கு அடித்தளம் அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி.
5.கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது
கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
6.ஆதவ் அர்ஜூனாவுக்கு விசிக நிர்வாகிகள் எதிர்ப்பு
திமுக - விசிக கூட்டணி தொடர்பாக ஆதவ் அர்ஜூனா கூறிய கருத்தில் உடன்பாடு இல்லை 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பேட்டி.
7.பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய புகாரில் பாஜக நிர்வாகி செல்வகுமார் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
8.வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
9.வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 2011-16 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது ரூபாய் 33 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு. ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பு அனுமதிக்கு ரூபாய் 28 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
10.பிரதமர் மோடிக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்
பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக இந்தியப் பிரதமர் பதவியை அலங்கரிக்கும் தாங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் தேவையையும், முக்கியத்துவத்தையும் முழுமையாக அறிந்திருப்பீர்கள். எனவே, இந்தியாவில் சமூகநீதியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக 2021&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஆணையை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம்.
டாபிக்ஸ்