தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: தமிழ அரசை சாடும் ஈபிஎஸ்! தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! பருவமழை ஆய்வில் உதயநிதி! இன்றைய டாப் 10 நியூஸ்!

TOP 10 NEWS: தமிழ அரசை சாடும் ஈபிஎஸ்! தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! பருவமழை ஆய்வில் உதயநிதி! இன்றைய டாப் 10 நியூஸ்!

Kathiravan V HT Tamil

Oct 13, 2024, 02:04 PM IST

google News
TOP 10 NEWS: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து உதயநிதி பேட்டி, தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, தமிழக அரசு மீது அதிமுக விமர்சனம், ஈபிஎஸ்க்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
TOP 10 NEWS: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து உதயநிதி பேட்டி, தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, தமிழக அரசு மீது அதிமுக விமர்சனம், ஈபிஎஸ்க்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து உதயநிதி பேட்டி, தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, தமிழக அரசு மீது அதிமுக விமர்சனம், ஈபிஎஸ்க்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

1.துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு அடையாமல் இருந்தால் அதை சுற்றி வேலை அமைக்க வேண்டும். மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வெளி மாவட்ட ஆட்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். மழை நேரத்தில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டு மக்களை காக்கும் பணியில் ஈடுபடுவோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. 

2.கலைஞர் பன்னாட்டு அரங்க கட்டுமானம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் 487 கோடி செலவில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் பன்னாட்டு அரங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியது.

3.சங்கரலிங்கனாருக்கு முதல்வர் புகழாரம்  

வீரத்தியாகி சங்கரலிங்கனார் காட்டிய தியாக பாதையில் செவதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர் தமிழராகார், மனிதராகார்! என பேரறிஞர் அண்ணா நெக்குருகப் போற்றிய விருதுநகர் சங்கரலிங்கனார் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இடம்பெற 76 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து தம் இன்னுயிரை தந்த நாள் இன்று! அந்த உத்தமத் தியாகிக்கு தமிழ்நாடு என்றென்றும் நன்றிக்கடன் பட்டு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட். 

4.ஆதி திராவிட நலத்துறை குறித்து ஈபிஎஸ் கேள்வி

திமுக ஆட்சியில் ஆதி திராவிட நலத்துறை செயல்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. மாவட்ட மேலாளர் உள்ளிட்ட பதவிகள் டிஎன்பிஎஸ்சி, சீனியாரிட்டி, அரசு விதிப்படி நிரப்பப்படவில்லை. மாவட்ட மேலாளர்களை நேரடி நியமனம் செய்து ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை ஊதியம் வழங்கப்படுகின்றது. பட்டியலினத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான சமையலர்களின் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம். 

5.கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து வழக்குப்பதிவு 

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு அளித்த புகாரின் பேரில் கொருக்கு பேட்டை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

6.ரயிலில் தொங்கிய சிறுவன் படுகாயம் 

சென்னை ராயபுரத்தில் ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்த 16 வயது சிறுவன் மின் கம்பத்தில் மோதி படுகாயம், சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

7.தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை 

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை. 

8.ஈ.பி.எஸ்க்கு எம்.ஆர்.கே கேள்வி 

கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவருக்கு வேண்டப்பட்ட தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தியின் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை திமுக அரசு மீட்டு கலைஞர் பூங்காவை உருவாக்கினால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வராது? என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேள்வி.

9.திமுக அரசு மீது எல்.முருகன் விமர்சனம்  

"முழுக்க முழுக்க வேதனையான ஆட்சி. சொத்து வரி, மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு. டாஸ்மாக் கடைகளை மூடுவோம்னு சொல்லிட்டு மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள்” திறக்கப்பட்டு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம். 

10.போக்சோ கைதி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட போக்சோ வழக்கு விசாரணைக் கைதி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது. அஜாக்கிரதையாக செயல்பட்டதாக இரு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். போக்சோவில் கைதாகி சிறையில் இருந்த ரமேஷ் (46) என்பவர் வலிப்புநோய் காரணமாக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு களைக்கொல்லி மருந்தைக் குடித்து அவர் தற்கொலை செய்துள்ளார். பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக நவநீதகிருஷ்ணன், வல்லரசு ஆகிய இரு காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி