TN Plus 2 Supplementary Exams 2023: ப்ளஸ் 2 துணைத்தேர்வுகள் அட்டவணை மற்றும் விண்ணப்ப தேதி அறிவிப்பு
May 10, 2023, 07:37 AM IST
ப்ளஸ் 2 துணைத் தேர்வுக்கான அட்டவணையை தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. ப்ளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்த உடனடி துணை தேர்வு எழுதலாம்.
தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியானது. இதையடுத்து ப்ளஸ் 2 உடனடி துணை தேர்வுக்கான முழு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. ப்ளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், தனிதேர்வர்கள் இந்த துணை தேர்வுகளை எழுதலாம். இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா. சேதுராம வர்மா வெளியிட்டிருக்கும் அறிவிப்பு:
ப்ளஸ் 2 வகுப்புக்கான துணைத்தேர்வுகள் வரும் ஜுன் 19 முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள், தனிதேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
மே 11ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை பள்ளி மாணவர்கள் அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களை தேர்வு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
இதில் விண்ணப்பம் செய்ய தவறும்பட்சத்தில் தட்கல் முறையில் மே 18 முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தட்கல் முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ. 1000 செலுத்த வேண்டும்.
தேர்வு கட்டணம், விரிவான தேர்வுக்கால் அட்டவணை போன்று கூடுதல் விவரங்களஅ
www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்த தேர்வுகள் காலை 10 முதல் 10.10வரை வினாத்தாள் படிப்பதற்கும், 10.10 முதல் 10.15 வரை விடைத்தாள் தகவல்கள் சரிபார்க்கவும், 10.15 முதல் 1.15 மணி வரை தேர்வு எழுதவும் அனுதமிக்கப்படுகிறார்கள்.
ஜுன் 19ஆம் தேதி மொழித்தாள், ஜுன் 20ஆம் தேதி ஆங்கிலம், ஜுன் 21ஆம் தேதி தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம் மற்றும் கொள்கை, கணிணி அறிவியல், உயிர் வேதியியல், ஜுன் 22ஆம் தேதி இயற்பியல், பொருளியல், ஜுன் 23ஆம் தேதி கணக்கு, விலங்கியல், வணிகவியல், உணவு மற்று ஊட்டச்சத்துவியல், ஜுன் 24ஆம் தேதி தாவரவியர், வரலாறு, வணிக மேலாண்மை மற்றும் புள்ளியியல்,
ஜுன் 26ஆம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல் தேர்வுகள் நடத்தப்படும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2022- 23 கல்வியாண்டில் ப்ளஸ் 2 தேர்வுகளை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என 8,03,385 பேர் தேர்வு எழுதினர்.
அதில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதவீதமாக உள்ளது. தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களின் எண்ணிக்கை 47,934 ஆகும். இதையடுத்து தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடி வாய்ப்பு வழங்கும் விதமாக இந்த தனித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்