தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Medical Counselling : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு - சிறப்புப் பிரிவுக்கு இன்று நேரடி கலந்தாய்வு

TN Medical Counselling : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு - சிறப்புப் பிரிவுக்கு இன்று நேரடி கலந்தாய்வு

Priyadarshini R HT Tamil

Jul 27, 2023, 04:30 AM IST

TN Medical Counselling : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இணையவழி பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி தொடங்கியது. சிறப்புப் பிரிவு, 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர் ஒதுக்கீட்டு இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு இன்று (ஜூலை 27ம் தேதி) நடைபெறுகிறது.
TN Medical Counselling : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இணையவழி பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி தொடங்கியது. சிறப்புப் பிரிவு, 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர் ஒதுக்கீட்டு இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு இன்று (ஜூலை 27ம் தேதி) நடைபெறுகிறது.

TN Medical Counselling : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இணையவழி பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி தொடங்கியது. சிறப்புப் பிரிவு, 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர் ஒதுக்கீட்டு இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு இன்று (ஜூலை 27ம் தேதி) நடைபெறுகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,856 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,179 பேரும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடங்களுக்கு 2,993 பேரும் இடம்பெற்றிருந்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

அவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு முதல் கட்டமாக இணைய வழியே தொடங்கியுள்ளது. அந்த கலந்தாய்வு குறித்த வழிகாட்டுதல் வீடியோ பதிவு மக்கள் நல்வாழ்வுத் துறை இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்புப் பிரிவு - மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 27ம் தேதி) சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறவுள்ளது.

முதலிட மாணவர் - நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்தியளவில் முதல் இடத்தை பிடித்க விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஜெ.பிரபஞ்சன், தமிழக வரிசைப் பட்டியலிலும் முதலிடம் பிடித்திருந்தார்.

இதனிடையே, கடந்த 20ம் தேதி தொடங்கிய அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்ற அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதேபோல், தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் உள்ள தமிழக மாணவர்களில் சிலர் தில்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் சேரத் திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அவர்களுக்கு பின்னால் இருந்தவர்கள் முன்னிலைக்கு வந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி