தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரசு மருத்துவமனை- இந்து அறநிலையத்துறை

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரசு மருத்துவமனை- இந்து அறநிலையத்துறை

I Jayachandran HT Tamil

Jun 20, 2022, 11:48 AM IST

google News
இந்து அறநிலையத்துறை சார்பில் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்து அறநிலையத்துறை சார்பில் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்து அறநிலையத்துறை சார்பில் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை: உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மருத்துவமனை அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவசர சிகிச்சையளிக்க ஹிந்து அறநிலையத்துறை சார்பில் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள், வெளிநாடுகளில் இருந்து தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு மாரடைப்பு, மயக்கம் உட்பட திடீரென சில உடல்நலக்குறைவு ஏற்படுவது இயல்பு. இதற்காக அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்துச் செல்ல ஒரு ஆம்புலன்ஸ் உள்ளது. இந்நிலையில் முதலுதவி உட்பட விரைந்து சிகிச்சையளிக்க ஹிந்து அறநிலையத்துறை சார்பில் மருத்துவமனையும் அமைய உள்ளது.

கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பக்தர்களின் வசதிக்காக மருத்துவமனை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பி உள்ளோம். தலா 2 டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், உதவியாளர்கள் இருப்பர். உடல்நலக்குறைவு ஏற்படும் பக்தர்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும். பணிகள் முடிக்கப்பட்டபின் இம்மருத்துவமனை தற்காலிகமாக கோயில் உள்ளே ஒரு கட்டடத்தில் செயல்படும். படுக்கை வசதியும் உண்டு. மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர், என்றார்.

மருத்துவ அலுவலர், செவிலியர் பணிக்கு விண்ணபிக்க விரும்புவோர் ஹிந்து மதத்தவராக, தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் உள்ளன. விண்ணப்ப படிவம், நிபந்தனைகளை www.maduraimeenakshi.org, www.tnhrce.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம், என்றனர்.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி