தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aadhar Mandatory: 'சலுகைகளை பெற ஆதார் கட்டாயம்' - தமிழக அரசு அறிவிப்பு!

Aadhar mandatory: 'சலுகைகளை பெற ஆதார் கட்டாயம்' - தமிழக அரசு அறிவிப்பு!

Dec 16, 2022, 02:45 PM IST

google News
தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் எண் இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் அதை பெறும் வரையில் பிற ஆவணங்களை சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் பல்வேறு மானியங்கள், நல திட்டங்களை பெற வேண்டுமானால் அதற்கு ஆதார் எண் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு (TNeGA), துணை அங்கீகார பயனர் முகமையாக கருவூலங்கள் மற்றும் கணக்கு துறை நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த துறையின் மூலம் பல்வேறு வகையான மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் அதை பெறும் வரையில் ஒன்றிய மற்றும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள பிற ஆவணங்களை அடையாளமாக சமர்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மின் இணைப்புதாரர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு, இணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து அரசின் பல்வேறு வகையான நல திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி