தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Magalir Urimai Thogai: ரூ.1000 உரிமைத் தொகை திட்டம்.. புதிய ரேஷன் கார்டுகளுக்கு செக்!

Magalir Urimai Thogai: ரூ.1000 உரிமைத் தொகை திட்டம்.. புதிய ரேஷன் கார்டுகளுக்கு செக்!

Karthikeyan S HT Tamil

Jul 16, 2023, 05:54 PM IST

google News
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய அட்டையைப் பெறுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றிருந்த முக்கிய திட்டமான, தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 20ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டத்தில், பயனாளிகளை தேர்வு செய்வதற்காக ஆய்வுகள் செய்து, தரவுகள் அடிப்படையில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. திட்டப் பயனாளி 21 வயதுக்கு மேற்பட்ட குடும்பத் தலைவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் ஆண்டு வருமானம், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கு குறைவான புன்செய் நிலம், ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் என பல்வேறு அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டையில் உள்ள தகவலை வைத்து குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும்.

இந்த நிலையில், பலர் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய குடும்ப அட்டை பெற பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் முழுமையாக பெறப்படும் வரை குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பெயரை நீக்குவதற்கான காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் அதனை பரிசீலித்து முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி