தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tiruvallur: ’பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதாவா? தெர்மாகோலை விஞ்சும் சம்பவம்! உண்மை என்ன?

Tiruvallur: ’பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதாவா? தெர்மாகோலை விஞ்சும் சம்பவம்! உண்மை என்ன?

Kathiravan V HT Tamil

Dec 13, 2023, 08:58 AM IST

google News
”தூய்மை பணியாளர்கள் கொண்டு வந்த மூட்டையை பரிசோதித்தபோது அதில் பேக்கரிகளில் பிஸ்கட், ரொட்டி, தயாரிக்க பயன்படுத்தப்படும் மைதா மாவு இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது”
”தூய்மை பணியாளர்கள் கொண்டு வந்த மூட்டையை பரிசோதித்தபோது அதில் பேக்கரிகளில் பிஸ்கட், ரொட்டி, தயாரிக்க பயன்படுத்தப்படும் மைதா மாவு இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது”

”தூய்மை பணியாளர்கள் கொண்டு வந்த மூட்டையை பரிசோதித்தபோது அதில் பேக்கரிகளில் பிஸ்கட், ரொட்டி, தயாரிக்க பயன்படுத்தப்படும் மைதா மாவு இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது”

கடந்த அதிமுக ஆட்சியில் வைகை ஆற்றிலி உள்ள தண்ணீரை ஆவி ஆகாமல் தடுக்க தெர்மாகோல் போட்டு மூடி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்த சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. தற்போது அதனை ஒத்த சம்பவம் ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறைந்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள நாரவாரிகுப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் குவிந்திருந்த குப்பை கழிவுகளை அகற்றி கிருமி நாசினி பவுடர்களை தூய்மை பணியாளர்கள் தூவினர். இந்த நிலையில் செங்குன்றம் டாக்டர் வைத்தீஸ்வரன் தெரு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தூவப்பட்ட கிருமி நாசினி பவுடர்களில் இருந்து மைதா வாசனை வீசியதாக அங்குள்ள மக்கள் குற்றம்சாட்டினர்.

அந்த பவுடரை கையில் எடுத்து பார்த்தபோது பவுடர் மென்மையாக இருந்ததாகவும், தூய்மை பணியாளர்கள் கொண்டு வந்த மூட்டையை பரிசோதித்தபோது அதில் பேக்கரிகளில் பிஸ்கட், ரொட்டி, தயாரிக்க பயன்படுத்தப்படும் மைதா மாவு இருந்ததாகவும் தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.

மேலும் பிளிச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவை கொடுத்து அனுப்பிய பேரூராட்சி செயல் அலுவலர், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவருக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர் அளித்துள்ள விளக்கத்தில், பிளீச்சிங் பவுடருடன் சுண்ணாம்பு கலந்து வீதியில் தூவ அந்த மூட்டையை கொடுத்து அனுப்பியதாகவும், தங்களுக்கு சுண்ணாம்பு சப்ளை செய்த விநாயகா ஏஜென்சி நிறுவனம் மைதாவை நிரப்பும் கவரில் சுண்ணாம்பை ஓட்டு அனுப்பியதால் அதனை மைதா மாவு என்று மக்கள் தவறாக எண்ணிவிட்டதாக கூறி உள்ளார்.

அடுத்த செய்தி