தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vinayagar Idol Immersion: சென்னையில் விநாயகர் சிலைகள் மெரினா பீச்சில் கரைப்பு

vinayagar idol immersion: சென்னையில் விநாயகர் சிலைகள் மெரினா பீச்சில் கரைப்பு

I Jayachandran HT Tamil

Sep 04, 2022, 02:56 PM IST

google News
சென்னையில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மெரினா கடற்கரையில் கரைக்கப்பட்டது.
சென்னையில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மெரினா கடற்கரையில் கரைக்கப்பட்டது.

சென்னையில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மெரினா கடற்கரையில் கரைக்கப்பட்டது.

சென்னை: சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்கப்படுகிறது. இதனையடுத்து மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த மாதம் 31ம் தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 2,600 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, தினமும் பூஜைகள் நடந்தன. இந்த சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்தனர். சிலைகளை எடுத்த வந்த வாகனங்களை போலீசார் குறிப்பு எடுத்து வைத்தனர்.

பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம்; நீலாங்கரை, பல்கலை நகர்; காசிமேடு மீன்பிடித் துறைமுகம்; திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய கடற்கரை இடங்களில் கரைக்கப்பட்டதுது. விநாயகர் சிலைகள் புறப்படும் இடத்தில் இருந்து கடலில் கரைக்கப்படும் இடம் வரை போலீசார் பாதுகாப்பு அளித்தனர் .விநாயகர் சிலைகள் ஊர்வலத்தால், இன்று நண்பகல் 12:00 முதல் இரவு 8:00 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என போலீசார் எச்சரித்திருந்தனர். மேலும், போக்குவரத்து மாற்றத்தையும் செய்திருந்தனர்.

விநாயகர் சிலைகள் கரைப்பை முன்னிட்டு, சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் , 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் , ஊர்வல படையினர், அதிரடி விரைவுப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி