தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ayudha Puja: ஆயுத பூஜை விற்பனைக்கு ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்ட வாழை தார்கள்!

Ayudha Puja: ஆயுத பூஜை விற்பனைக்கு ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்ட வாழை தார்கள்!

Oct 21, 2023, 10:48 AM IST

google News
வத்தலக்குண்டு வாழைத்தார் சந்தையில் இருந்து சில்லறை விற்பனைக்காக சுமார் 35 ஆயிரம் வாழைத்தார்கள் ஒரே நாளில் விற்பனையாகி ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வத்தலக்குண்டில் ஆயுத பூஜையை ஒட்டி ஆயிரக்கணக்கில்  வாழை தார்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய் கிழமை செவ்வாழை ஒரு தார் ரூபாய் 1300 வரை விற்பனையானது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் வாழைத்தார் விற்பனைக்கு என்று தனியாக சந்தைகள் செயல்பட்டு வருகின்றது

வாரம் இருமுறை செயல்படும் இந்த சந்தைகளில் தேனி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில் வரும் ஆயுத பூஜை திருநாளை யொட்டி விவசாயிகளால் அதிகப்படியான வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இருப்பினும் தேவை அதிகமாக இருந்த காரணத்தினால் வியாபாரிகள் வாழைத்தார்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர்.

வரத்து அதிகம் இருந்த போதிலும் ஒவ்வொரு வாழைத்தார்களின் தன்மைக்கு ஏற்ப போதிய விலை கிடைத்தது.

செவ்வாழை தார் ஒன்று ரூபாய் 300 முதல் ரூபாய் 1300 வரை விற்பனையானது

ரஸ்தாளி தார் ஒன்று ரூபாய் 200 முதல் 800 வரை விற்பனையானது.

கற்பூரவல்லி வாழை தார் ஒன்று ரூபாய் 150 முதல் ரூபாய் 600 வரை விற்பனையானது.

இதேபோல் பூவன் பழ தார் ஒன்று ரூபாய் 100 முதல் ரூபாய் 500 வரை விற்பனையானது.

இதே போல் நாழிப்பூவன் மற்றும் ஒட்டு நாடு வாழைத்தார்கள் ரூபாய் 50 முதல் ரூபாய் 250 வரை விற்பனை செய்யப்பட்டது.

வத்தலக்குண்டு வாழைத்தார் சந்தையில் இருந்து சில்லறை விற்பனைக்காக சுமார் 35 ஆயிரம் வாழைத்தார்கள் ஒரே நாளில் விற்பனையாகி ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி