வாணி ஜெயராம் உயிரிழந்து இப்படித்தான்! இறுதி ஊர்வலம் தொடங்கியது
Feb 05, 2023, 01:26 PM IST
வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த டிஜிபிக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பிரபல பின்னனி பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார் . இந்நிலையில் நேற்று அவரது படுக்கை அறையில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
அவரது உடலில் ரத்தக்காயம் இருந்ததால் இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .
பிரேத பரிசோதனையில் அறிக்கை
இந்நிலையில் தலையில் காயம் ஏற்பட்டதே வாணி ஜெயராம் மரணத்திற்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதல் கட்ட அறிக்கையில் தகவல் வெளியாக உள்ளது. மேலும் படுக்கை அருகில் இருந்த 2 அடி உயரமுள்ள மேசை மீது விழுந்ததால் வாணி ஜெயராம் தலையில் பலத்த அடிபட்டது. நெற்றி காயம் மற்றும் மேசை விளிம்பில் உள்ள ரத்த கறையை வைத்து தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல் துறை மரியாதை
ஆளுநர் ஆர்.என்.ரவி இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி, பாடகி சித்ரா, மனோபாலா, இசை அமைப்பாளர்கள் தினா, கணேஷ், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், பாடகி சுஜாதா உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாணி ஜெயராம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த டிஜிபிக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இறுதி சடங்கு
இந்நிலையில் தற்போது அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் துவங்கி உள்ளது. அவரது இறுதி ஊர்வலம் காவல்துறை அணிவகுப்புடன் துவங்கியது பெசன் நகர் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
இயற்கைக்கு மாறான மரணம்?
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் மரணம் அடைந்த நிலையில் அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் காலை 11 மணியளவில் வந்த அவரது வீட்டு பணிப்பெண் மலக்கொடி கதவை தட்டி உள்ளார். கதவு திறக்கப்படாததால் வாணி ஜெயராமின் தங்கைக்கு மலர்க்கொடி தகவல் கொடுத்துள்ளார்.
திறக்கப்படாத கதவு?
இதையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது முகத்தில் காயத்துடன் அவர் கீழே விழுந்து உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டு காவல்துறையினர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தற்போது உடற்கூராய்வு நடைபெற்று வருகிறது. உடற்கூராய்வு முடிந்த பின் அவரது உடல் உறவினர்களிடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் வாணிஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று அவரது மரணம் இயற்கைக்கு மாறானது இல்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்