தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Spurious Liquor Dead: கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

Spurious Liquor Dead: கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

May 16, 2023, 09:46 AM IST

google News
கள்ளச்சாராய விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
கள்ளச்சாராய விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

கள்ளச்சாராய விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில தினங்களில் கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் சில தினங்களுக்கு முன் 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதில் 16 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் மயக்கமடைந்த நிலையில் அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஊர் முழுவதும் சாராயம் அருந்தியவர்கள் ஆங்காங்கே மயங்கி சுருண்டு விழுந்துள்ளனர். இதையடுத்து முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மரக்காணம் மற்றும் மதுராந்தகத்தில் இதுவரை கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மேலும், கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா மற்றும் செங்கல்பட்டு எஸ்பி பிரதீப் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளச்சாராம் விற்பனை விவகாரத்தில் இதுவரை 10 மாவட்டங்களை சேர்ந்த 410 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி