DMK MP Meeting: வரும் செப்.16ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
Sep 04, 2023, 12:44 PM IST
வரும் செப்டம்பர் 16-ல் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்.18 முதல் 22 வரை, நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் கேள்வி நேரம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அக்கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான மசோதா கொண்டுவரப்படலாம் எனவும், ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தெரிகிறது.
இந்நிலையில் அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து விவாதிக்க திமுக எம்.பி.க்கள் கூட்டம் வரும் செப்டம்பர் 16-ல் சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், திமுகவைச் சார்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் எனவும், இக்கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்