Nellai: சுடலைமாடன், இசக்கி கடவுள்களை பற்றி தவறான பேச்சு! - தொழிலாளியை அடித்தே கொன்ற நண்பர்கள்! - நெல்லையில் பயங்கரம்!
Jul 15, 2023, 09:06 AM IST
குலதெய்வம் குறித்து தவறாக பேசியதால் தொழிலாளி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை தச்சநல்லூர் காந்தி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவருடைய மகன் பாலமுருகன் என்ற பாலன். திருமணம் ஆகாத இவர் சுசீந்திரம் பார்கவி நகரில் உள்ள பர்னிச்சர் கடையில் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதே கடையில் கோட்டார் இடலாம்குடி பட்டாரியார் நெடுந்தெடுவை சேர்ந்த கணேஷ் என்பவரும் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் வருகிறார்.
இவர்கள் இரண்டு பேரும் வேலை முடிந்து இரவு கடையிலேயே தூங்குவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுமார் 8 45 மணியளவில் கடை உரிமையாளர் கண்ணன் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். அப்போது கணேஷின் நண்பர் ஜெகதீஷ் என்பவர் மது பாட்டில்களுடன் கடைக்கு வந்திருக்கிறார் பின்னர் பாலமுருகன் கணேஷ் ஜெகதீஷ் ஆகிய மூன்று பேரும் கடையில் அமர்ந்து மது குடித்து இருக்கிறார்கள்.
அப்போது பாலமுருகன் சுடலைமாடசாமி மற்றும் இசக்கியம்மன் கோயில்களை பற்றி தவறாக பேசியதாக சொல்லப்படுகிறது இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ஜெகதீஷ் மற்றும் கண்ணன் எங்கள் குலதெய்வத்தை பற்றி நீ எப்படி தவறாக பேசலாம் என கேட்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்கு பாலமுருகன் தான் அப்படித்தான் பேசுவேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ் மற்றும் கணேஷ் கடையில் கிடந்த மரக்கட்டையை எடுத்து பாலமுருகனை சர மாரியாக தாக்கினர்.
இதில் பாலமுருகனுக்கு தலை உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் கடுமையாக காயம் ஏற்பட்டது. அப்போது வீட்டுக்கு சென்று இருந்த கடை உரிமையாளர் கண்ணன் திடீரென்று அங்கு வந்தார். சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களை அவர் விலக்கினார்.
தொடர்ந்து ரத்தக்காயத்துடன் கிடந்த பாலமுருகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். இது குறித்து கண்ணன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பெயரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் ஜெகதீஷ் கணேஷ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
டாபிக்ஸ்