Fridge Exploded : உஷார் - வெடித்து சிதறிய பிரிட்ஜ்- எரிந்து சாம்பலான பொருட்கள்!
Nov 27, 2022, 07:42 AM IST
முசிறி அருகே வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறியது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி : தொட்டியம் தாலுக்கா தோளூர்பட்டியில் சேர்ந்தவர் விவசாயி மாசி. இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக இவரது வீட்டின் உள் அறையில் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து சிதறியது.
இதில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் வீட்டில் வைத்திருந்த பத்திரம், ஆவணங்கள், டிவி, உட்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்த முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், துணை தாசில்தார் கவிதா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மாசி குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். அப்போது வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சமீபத்தில் சென்னையில் குளிர்சாதன பெட்டி வெடித்து மூவர் உயிரிழந்தனர். அவர்கள் துபாயில் இருந்து வந்த நிலையில் வெகு நாட்களாக குளிர்சாதன பெட்டியை பயன்படுத்தாததால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிகிறது. இந்த விபத்து மக்கள் மத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் முசிறியில் தற்போது குளிர்சாதன பெட்டி வெடித்தது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்