Aadhav Arjuna: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை!
Mar 09, 2024, 01:02 PM IST
Enforcement Department Raid: சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் இன்று காலைமுதல் அமலாக்கத் துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் இன்று காலைமுதல் அமலாக்கத் துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் கோவையில் உள்ள ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2019 இரண்டு முறை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
யார் இந்த ஆதவ் அர்ஜுனா
சமீப காலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆதவ் அர்ஜுனா முக்கியத்துவம் வாய்ந்த நபராக பார்க்கப்படுகிறார் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். மேலும் ஆதவ் அர்ஜுனா லாட்டரி மார்டினின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான வாய்ஸ் ஆப் காமன் தலைவராக இருந்தார். அண்மையில் திருச்சியில் நடைபெற்ற வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக இணைந்தார். சில வாரங்களில் அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட வைக்க தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால்தான் திமுக கூட்டணியில் பொது தொகுதி ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவின.
இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று திமுக விசிக கூட்டணி உறுதியான நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறுகையில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-விசிக மற்றும் மற்ற தோழமை கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக தொகுதி உடன்பாட்டில், சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் சற்று முன் கையெழுத்தானது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் என்ன பகிர்வு முறை கையாளப்பட்டதோ அதே பகிர்வு முறை ஒவ்வொரு கட்சியின் உடன்பாட்டோட்டு தொகுதி பங்கீடு நடந்துள்ளது. விசிக கட்சி மூன்று தனித் தொகுதிகள், ஒரு பொதுத்தொகுதிகளை கேட்டோம்.
பின்னர் இரண்டு தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதிகளை வலியுறுத்தினோம். கடந்த தேர்தல்களில் இந்த கூட்டணி எவ்வளவு கட்டுக்கோப்பாக இயங்கியதோ, அந்த அடிப்படையில் விரிவான கலந்தாய்வுக்கு பிறகு, கடந்த தேர்தலில் பகிரப்பட்ட அதே முறைக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையல் நேற்று திமுக விசிக கட்சிகளுக்கு இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இன்று சென்னையில் அரசு ஒப்பந்ததாரர் கரூர் செல்வராஜூக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றுவரும் நிலையில் ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9