தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tancet Exam Results : டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

Tancet Exam Results : டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

Divya Sekar HT Tamil

Apr 14, 2023, 07:58 AM IST

google News
டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கும். அதேபோல் இன்ஜினியரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் ‘டான் செட்' தேர்வு நடத்தப்படுகிறது.

இதில், தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகள் மேல்படிப்புகளில் சேரலாம். இந்த நிலையில் எம்.பி.ஏ., எம். சி.ஏ. போன்ற படிப்புகளுக்கான டான்செட் தேர்வு வரும் மார்ச் 25ம் தேதி நடைபெற்றது. கடந்த ஆண்டு வரை எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். எனப்படும் முறையே முதுகலை பொறியியல், முதுகலை தொழில்நுட்பம், முதுகலை கட்டிடவியல் மற்றும் முதுகலை திட்டமிடல் படிப்புகளுக்கு டான்செட் தேர்வு மூலமே மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த ஆண்டு சிஇஇடிஏ எனப்படும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் B.E, B.Tech., Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது.

டான்செட் எம்சிஏ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை மார்ச் 25ஆம் தேதி காலையிலும், , எம்பிஏ படிப்பிற்கான தேர்வினை மார்ச் 25 ஆம் தேதி மாலையிலும் பயனாளர்கள் எழுதினார்கள். CEETA-PG எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகிய படிப்பில் சேர்வதற்கான தேர்வினை மார்ச் 26 ஆம் தேதி எழுதினர்.

தேர்வினை எழுதிய 36,403 மாணவர்களுக்கான முடிவுகள் இன்று(ஏப்ரல் 14) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. மேலும் இவர்களுக்கான தேர்வு முடிவுகளை https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் பார்த்துக் தெரிந்துக் கொள்வதுடன், மதிப்பெண் பட்டியலை ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல், மே 20 – ஆம் தேதி வரையில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி