‘அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்.. ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்!
Dec 18, 2024, 05:37 PM IST
‘எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்’
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு:
‘‘யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்...
அம்பேத்கர்... அம்பேத்கர்...
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும் மகிழ
உச்சரித்துக்கொண்டே இருப்போம்.
எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்,’
என்று விஜய், அந்த பதிவில் கூறியுள்ளார்.