தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain Alert: தென் தமிழ்நாட்டில் சம்பவம் இருக்கு!’ எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்!

Rain Alert: தென் தமிழ்நாட்டில் சம்பவம் இருக்கு!’ எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்!

Kathiravan V HT Tamil

Dec 17, 2023, 11:35 AM IST

google News
”Rain Alert: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்றே எச்சரிக்கை விடுத்து இருந்தது”

தென் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு இடைவிடாத மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், வட தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்றே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

நேற்று இரவு தொடங்கி நெல்லை, தென்காசி, கன்னியகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய தொடர் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த விவரத்தை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் பதிவிட்டுள்ளார்.

அதில், தென் தமிழகத்தில் (கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி) சம்பவம் தொடங்கியது.

அடுத்த 48 மணி நேரத்தில் இடைவிடாது மழை பெய்யும். மாஞ்சோலை மலை மற்றும் கோதையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளை கவனிக்க வேண்டும். அணைகளான மணிமுத்தாறு , பாபநாசம் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்றும், மாஞ்சோலை மலைப்பகுதியில் 30-50 செ.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மாஞ்சோலைக்கு அடுத்துள்ள, கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தின் மறுபகுதியிலும் கனமழை பெய்யும் என்றும் குழித்துறையாறு, தம்பிரபரணி பகுதியில் வசிக்கும் மக்கள் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி