Evening Top 10 News: சி.வி.சண்முகம் பேச்சு மோசம் முதல் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி வரை - மாலை டாப் 10 நியூஸ்!
Aug 05, 2024, 07:31 PM IST
Evening Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
Evening Top 10 News: தமிழ்நாடு முதல் உலகம் வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
சி.வி.சண்முகத்துக்கு நீதிமன்றம் கண்டனம்
முதலமைச்சர் பற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது. 2022ல் விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
கோவை காவல்துறை நடத்திய அதிரடி வேட்டை
கடந்த 2 ஆண்டுகளில் ரூ.3.71 கோடி செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளதாக கோவை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனி பிரிவு தொடங்கப்பட்டு பொதுமக்கள் தவறவிடும் செல்போன்கள் குறித்து உரிய புகார் பெற்று, IMEI நம்பரை வைத்து செல்போன்களை கண்டறிந்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். அதன்படி 2024-ல் பொதுமக்கள் தவறவிட்ட ₹94.78 லட்சம் மதிப்பிலான 504 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
தமிழகம் முதலிடம்
நாளொன்றுக்கு சராசரி மின்சாரத்தை அதிக அளவில் வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 2023-2024 நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரி மின்சாரம் தமிழ்நாட்டில் நகர்புற பகுதிகளில் 24 மணி நேரமும், கிராம புறங்களில் 23.5 மணி நேரமும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
5 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பூந்தமல்லி கிளைச்சிறையில் உள்ள பொன்னை பாலு, அருள், ராமு. ஹரிதரன். சிவசக்தியை காவலில் எடுக்க அனுமதி அளித்தது. 5 பேரையும் 7 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்ற நடுவர் ஜெகதீசன் அனுமதி அளித்துள்ளார்.
செந்தில்பாலாஜி ஜாமின் மனு நாளைக்கு ஒத்திவைப்பு
செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஸி அமர்வு முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று ஜாமீன் மனு மீது விசாரணையை நாளைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய நிறுவனத்தில் சோதனை
போலி ஆவணம் கொடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க வழக்கில், திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய தனியார் நிறுவன அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளார்.
தங்கம் வென்ற வீரருக்கு நேர்ந்த சோகம்
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற இத்தாலி நீச்சல் வீரர் தாமஸ் செக்கோன், பூங்காவில் உள்ள மரத்தடியில் உறங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தாமஸ் தங்கியுள்ள இடத்தில் AC இல்லை எனவும், மிகவும் சூடாக இருப்பதால் அங்கே உறங்க முடியவில்லை எனவும் ஏற்கனவே குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பாதுகாப்பு அதிகரிப்பு
இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான 4,096 கி.மீ. தொலைவு பகுதிகளில் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்க எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான 4,096 கி.மீ. தொலைவு பகுதிகளில் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்க எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிகாரிகள் உத்தரவு
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி
வங்கதேசத்தில் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார். தேசத்தின் முழுப் பொறுப்பையும் ராணுவம் ஏற்றுக்கொள்கிறது; மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ராணுவம் நிறைவேற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச ஜனாதிபதியிடன் சென்று இடைக்கால அரசை அமைக்க ராணுவம் உரிமை கோர உள்ளது. வங்கதேச பிரச்சினைகளுக்கு இட ஒதுக்கீடு முக்கிய காரணம் என்றாலும் அந்நாட்டில் நிலவிய கடும் வேலையின்மை என்பதும் மற்றொரு காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்