தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ips Transfer:ஏடிஜிபி மாற்றம், டிஜிபி.,க்கு பொறுப்பு: ஐபிஎஸ் ட்ரான்ஸ்பர் லிஸ்ட்!

IPS Transfer:ஏடிஜிபி மாற்றம், டிஜிபி.,க்கு பொறுப்பு: ஐபிஎஸ் ட்ரான்ஸ்பர் லிஸ்ட்!

Nov 30, 2022, 02:30 PM IST

google News
தமிழ்நாட்டின் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு பதவி உயர்வும், கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு பதவி உயர்வும், கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு பதவி உயர்வும், கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பணியாற்றும் முக்கிய 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. 

இதோ அந்த விபரம். 

சென்னை நிர்வாக ஏடிஜிபி சங்கர் , சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி., ஆகவும், போலீஸ் தலைமையிட ஏடிஜிபி வெங்கட்ராமனுக்கு நிர்வாக ஏடிஜிபி பொறுப்பு கூடுதலாகவும்,  ஹோம் கார்டு கூடுதல் கமாண்டர் ஏடிஜிபி ஜெயராம், ஆயதப்படை ஏடிஜிபி ஆகவும் நியமிக்கப்படுகின்றனர். 

டிஜிபி சைலேந்திரபாபு, காவலர் பயிற்சி கல்லூரியின் பொது இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார். தூத்துக்குடி ஏஎஸ்பி சந்தீஷ், பதவி உயர்வு வழங்கப்பட்டு கோவை நகர் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கோவை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் மதிவாணன், கோவை போக்குவரத்து துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். கோவை டிராபிக் போலீஸ் துணை கமிஷனர் அசோக் குமார், சென்னை சைபர் க்ரைம் எஸ்.பி., ஆக நியமிக்கப்பட்டுள்ளர். 

நாகை கடலோர காவல்படை எஸ்.பி., செல்வக்குமார், சென்னை கமாண்டோ படையின் எஸ்.பி.,ஆக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கமாண்டோ படையின் எஸ்.பி., ஆக இருந்த ராமர்,  நாகை கடலோர காவல்படையின் எஸ்.பி., ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலர் பனீந்தர் ரெட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி