’மரத்தை வெட்டினால் ஓராண்டு சிறை’ தமிழ்நாட்டில் விரைவில் வருகிறது புதிய சட்டம்!
Aug 23, 2023, 04:30 PM IST
”வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 260 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு அரசு திட்டம்”
மரங்களை வெட்டினால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையிலான புதிய சட்டம் விரைவில் அமலாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
பசுமையை பாதுகாக்கவும், தமிழ்நாட்டில் உள்ள வனப்பரப்புகளை அதிகமாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த அடிப்படையில் அரசின் முன் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டுவோர் மீது சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டையும் விதிக்க கூடிய தண்டனைக்குரிய குற்றனாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு புதிய சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இந்திய வனச்சட்டத்தின் புதிய முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, வனப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல், அத்துமீறி நுழந்து மரங்களை எடுத்து செனால் 6 மாத சிறை தண்டனைக்கு பதிலாக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனெவே அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு கூறுகையில், மரங்களை வெட்டுதவதை ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறையை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து மாநில அரசு மீபத்தில் மாநில அளவிலான மற்றும் மாவட்ட பசுமைக்குழுக்களை அமைத்துள்ளது. இந்த குழுக்களுக்கு சட்டபூர்வ ஆணையை வழங்க 1994 ஆம் ஆண்டின் டெல்லி வனச்சட்டம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற சட்டங்களின்படி ஒரு சட்டத்தை கொண்டுவர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இது போன்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. எனவே முன் அனுமதி ஏதும் பெறாமல் தனியார் சொத்துக்கள் உட்பட எந்த இடத்தில் இருந்து மரங்கள் அல்லது வனப்பொருட்களை வெட்டுவது, அகற்றுவது குற்றம்.
டெல்லி சட்டத்தின்படி மரட்டை வெட்டும் நபருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மரங்கள் குறித்த தகவல்களை படமாக பதிவு செய்வதற்கான பணிகளை அரசு செய்து வருகிறது. மேலும் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 260 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளது. இதுவரை அரசு 7 கோடி மரங்களை நட்டுள்ளது என தெரிவித்தார்.
டாபிக்ஸ்