Vinayagar Chaturthi: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை மாற்றம்! ஏன் தெரியுமா?
Aug 31, 2023, 03:13 PM IST
”செப்டம்பர் 17ஆம் தேதியை விநாயகர் சதுர்த்தி விடுமுறையாக தமிழ்நாடு அரசு முதலில் அறிவித்து இருந்தது”
விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் சிக்கல் உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்றி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.
2023ஆம் ஆண்டிற்காக தமிழ்நாடு அரசு வெளியிட்ட விடுமுறை அறிவிப்புகளில் செப்டம்பர் 18ஆம் தேதியை விநாயகர் சதுர்த்தி விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. ஆனால் பஞ்சாங்கப்படி செப்டம்பர் 17ஆம் தேதிதான் விநாயகர் சதுர்த்தி என ஜோதிடர்கள் தெரிவித்தனர்.
திதி, நட்சத்திரம், யோகம், கரணம், வாரம் ஆகிய 5 அம்சங்களை கொண்டு பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. இதில் திருக்கணிதம், வாக்கியம் என இரண்டு வகைகள் உண்டு. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 18ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் 19ஆம் தேதியும் கொண்டாடப்பட வேண்டும். ஆனால் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்டம்பர் 17ஆம் தேதி என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது தொடர்பாக விடுமுறை தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதியில் அறிவிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ரத்து செய்துள்ள தமிழ்நாடு அரசு அதற்கு பதிலாக செப்டம்பர் 18ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாபிக்ஸ்