IPS transfer: ஓய்வு பெற்ற ஏ.கே.விஸ்வநாதன்! ஒரே நேரத்தில் மாற்றப்பட்ட 15 ஐபிஎஸ் அதிகாரிகள்! நடந்தது என்ன?
Aug 05, 2024, 02:47 PM IST
IPS transfer: தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ் ஓய்வு பெற்று உள்ள நிலையில், அவருக்கு பதிலாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ் ஓய்வு பெற்று உள்ள நிலையில், அவருக்கு பதிலாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.
மேலும் மாற்றப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் விபரம்
- சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜி ஆர்.தினகரன் அவர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
- தலைமை காவல் படைப்பிரிவின் ஐஜியாக இருந்த டி.செந்தில் குமார் மேற்கு மண்டல ஐஜியாக நியமனம்.
- மேற்கு மண்டல ஐஜியாக இருந்த கே.புவனேஸ்வரி ஐபிஎஸ், தலைமை காவல் படைப்பிரிவு ஐஜியாக நியமனம்.
- தலைமை காவல் படைப்பிரிவு ஐஜி ரூபேஷ் குமார் மீனா ஐபிஎஸ், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக நியமனம்.
- நுண்ணறிவு பிரிவு ஐஜி டாக்டர் மஹேந்திர குமார் ரத்தோட் ஐபிஎஸ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கு இடமாற்றம்.
- சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் ஐஜி டாக்டர் பி.சாமுண்டீஸ்வரி ஐபிஎஸ், காவல் தலைமை பிரிவின் ஐஜியாக நியமனம்.
- குற்றிப்பிரிவு ஐஜி ஏ.ராதிகா ஐபிஎஸ், மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையராக நியமனம்.
- மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையராக இருந்த டாக்டர் பி.கே.செந்தில் குமார் ஐபிஎஸ், குற்றப்பிரிவு ஐஜியாக இடமாற்றம்.
- காவல் நல்வாழ்வு பிரிவின் ஐஜி நஜுமல் ஹோடா, காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக இடமாற்றம்.
- திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக இருந்த டாக்டர் பா.மூர்த்தி திருநெல்வேலி டிஐஜியாக நியமனம்.
- திருநெல்வேலி சரக டிஐஜியாக இஉர்ந்த ப்ரவேஷ் குமார் ஐபிஎஸ், பெருநகர சென்னை மாநகர வடக்கு பிரிவின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம்.
- பெருநகர சென்னை மாநகர வடக்கு பிரிவின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த அபிஷேக் தீக்ஷித் ரயில்வே காவல் பிரிவின் டிஐடியாக நியமனம்.
- திண்டுக்கல் சரக டிஐஜி டாக்டர் அபினவ் குமார் ஐபிஎஸ், ராமநாதபுரம் சரக டிஐஜியாக நியமனம்.
- ராமநாதபுரம் சரக டிஐஜி எம்.துரை ஐபிஎஸ், காவல்துறை நல்த்துறைக்கு இடமாற்றம்.
- சென்னை போக்குவரத்து காவல்துறையின் இணை ஆணையர் என்.தேவராணி ஐபிஎஸ், வேலூர் சரக டிஐஜியாக நியமனம்.
- வேலூர் சரக டிஐஜி சரோஜ் குமார் தாகூர் ஐபிஎஸ், சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமனம்.
தொடர்ந்து இடமாற்றம் செய்யப்படும் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த மாதத்தில் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு , புதிய காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவி பறிக்கப்பட்ட சந்தீப் ராய் ராத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
டாபிக்ஸ்