தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கள்ளச்சாராயம் விற்றவருக்கே 50 ஆயிரம் நிவாரணம் அறிவித்த அரசு! அம்பலமான ஆதாரங்கள்!

கள்ளச்சாராயம் விற்றவருக்கே 50 ஆயிரம் நிவாரணம் அறிவித்த அரசு! அம்பலமான ஆதாரங்கள்!

Kathiravan V HT Tamil

May 16, 2023, 09:09 PM IST

8 பேர் உயிரிழப்புக்கு காரணமான நபருக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அளித்துள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
8 பேர் உயிரிழப்புக்கு காரணமான நபருக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அளித்துள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

8 பேர் உயிரிழப்புக்கு காரணமான நபருக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அளித்துள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராயம் விற்ற நபருக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: ‘சவுக்கு சங்கர் கைது! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!’ ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

Congress: ’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கு நான் காரணமா?’ ரூபி மனோகரன் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி!

ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் செங்கல்பட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5இல் இருந்து 8ஆக உயர்ந்துள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சமும், மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு 50ஆயிரமும் நிவாரணத் தொகையாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

 கள்ளச்சாராய விற்பனை வழக்கில் கைதான அம்மாவாசை என்பவருக்கு நிவாரணம் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு

செங்கல்பட்டு மாவட்டத்தின் சித்தாமூர், பெருங்கருணை, பேரம்பாக்கத்தில் கள்ளசாராயம் விற்றவர்களின் பெயர் பட்டியலில் கருக்கந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த அம்மாவாசை என்பவர் உள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்த நிலையில் அவரும் கள்ளச்சாராயம் குடித்ததாக கூறி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். கள்ளச்சாராயம் விற்றதாக காவல்துறை சொன்ன அந்த நபருக்கு தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகையாக 50 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

அமாவாசையை கைது செய்துள்ளதாக அறிவித்த காவல்துறை

8 பேர் உயிரிழப்புக்கு காரணமான நபருக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அளித்துள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு காரணமானவர் என்று இந்த அரசு வழக்கு பதிவு செய்துள்ள அம்மாவாசை என்பவர் திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் என்கிறவருடைய தம்பி ஆவார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாவாசை தானும் அந்த மதுபானத்தை அருந்தியதாக அவரும் மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக் கொண்டார்.

இந்நிலையில் போலி மதுபான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அம்மாவாசைக்கு இந்த அரசு அதை போலி மதுபானத்தால் பாதிக்கபட்டவருக்கு வழங்கப்படும் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கி இருக்கிறது.

இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சி போலும். சில நாட்களுக்கு முன்னாள் ஒருவர் தன்னை மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் கேப்டன் என்று பொய் சொல்லி முதல்வரை சந்தித்து ஒருவர் பரிசு பெற்று செல்கிறார் தற்போது என்னவென்றால் கள்ளச்சாராயம் காய்ச்சி உயிரைப் பறித்தவர்க்கு அவரின் செயலை பாராட்டி பரிசு கொடுப்பது போல் நிவாரணம் கொடுக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே, ஏன் இந்த உலகத்துலேயே குற்றவாளிக்கு நிவாரணம் வழங்குகின்ற கோமாளித்தனமான ஒரே அரசு தற்போது ஆட்சியிலுள்ள திமுகவின் விடியா அரசு தான்!

நிர்வாக திறன் அற்ற முதல்வரின் தலைமையில் ஆட்சி நடக்கவில்லை இங்கே சர்க்கஸ் தான் நடக்கிறது என தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்