தமிழக பட்ஜெட் 2022-23: செய்திகள் உடனுக்குடன் ! LIVE
Mar 23, 2022, 12:18 PM IST
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.
மருத்துவ காப்பீடு திட்டம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1540 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர்
தமிழ்மொழிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு
தமிழ் மொழிக்கும் பிற சர்வதேச மொழிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராய குழு அமைக்கப்படும். அதற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர்
இலவச மிதிவண்டி திட்டம்
மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 1062 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர்
ஸ்மார்ட் கிளாஸ் ரூம்
திறன்மிகு வகுப்பறைகள் எனப்படும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1300 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர்
இல்லம் தேடி கல்வி
இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்- நிதியமைச்சர்
நகைக்கடன் தள்ளுபடி
- வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட தங்க நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
- மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
ஒலிம்பிக் தங்கப்பதக்கம் தேடல் திட்டம்
தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்கம் தேடல் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர்
நான் முதல்வன் திட்டம்
- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
- தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு
இலக்கிய திருவிழாக்கள்
ஆண்டுதோறும் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். இதற்காக ரூ. 5.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - நிதியமைச்சர்
பேராசிரியர் அன்பழகன் திட்டம்
அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்
நீர்நிலை பாதுகாப்பு
நீர்நிலை பாதுகாப்பு, அரசு நிலங்களை மீட்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
வெள்ள பாதிப்பு
சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பணிக்காக இந்தாண்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
அருங்காட்சியகம்
- வானிலை ஆய்வு மையத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
- விழுப்புரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
ரூ.50 கோடி ஒதுக்கீடு
தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
ரஷ்யா - உக்ரைன் போர்
உக்ரைன் மீதான ரஷ்ய போர் காரணமாக உலகளவில் பொருளாதார மீட்டெடுப்பு தடைபட வாய்ப்பு உள்ளது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
கூட்டாட்சி தத்துவம்
- தமிழ் சமுதாயத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய கடமை திமுக அரசுக்கு உள்ளது
- கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது - நிதியமைச்சர்
அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசின் மின்பகிர்மான கழகத்திற்கு கொடுத்த மானியம் அகவிலைப்படி உயர்வின் தாக்கம் பட்ஜெட்டில் இருக்கும் - பழனிவேல் தியாகராஜன்
அதிமுக வெளிநடப்பு
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
காகிதமில்லா தமிழக பட்ஜெட்
- தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- 2022 -2023 ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
திமுக அரசின் முதல் முழு பட்ஜெட்
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் முறையாக மாநிலத்தின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
பட்ஜெட் -2022-2023
தமிழக அரசின்2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழக சட்டப்பேரவையின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் கூட உள்ளது.