Tamil Live News Updates : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு!
Dec 01, 2023, 06:06 PM IST
Tamil Live News Updates: இன்றைய (1.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்”
அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்திருப்பதால், அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான ஊழல் வழக்கு - ஆளுநருக்கு மீண்டும் திருப்பி அனுப்பிவைப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்வது தொடர்பான கோப்பு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக, விசாரணை அறிக்கை தனித்தனி தாள்களாக உள்ளது எனக்கூறி கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் அந்த கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து நீர் திறப்பதில் தெலங்கானா - ஆந்திரா இடையே மோதல்
இரு மாநில எல்லையில் அமைந்திருக்கும் நாகார்ஜுனா சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் இரு மாநில அரசுகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தெலங்கானா அரசால் பூட்டப்பட்ட அணை கேட்டின் பூட்டுக்களை ஆந்திர அதிகாரிகள் உடைத்துள்ளனர்
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை நீர் திறப்பு!
Chembarambakkam: புயல் முன்னெச்சரிக்கை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, இன்று மாலை 5 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவத்தில் முக்கிய அப்டேட்!
TN Governor: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டுவீச்சு வீசப்பட்ட சம்பவத்தில் அவ்வழகை தேசியப் புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக விமர்சனம்!
Supreme Court: குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும்; அவருக்கான அதிகாரங்கள் விரிவானது எனவும்; ஆனால், ஆளுநர், ஒன்றிய அரசின் Nominee என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக விமர்சித்துள்ளார்.
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!
Salary Hike: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் 3500 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் நலன்கருதி அடிப்படை ஊதியம் 35 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வசமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அதிரடி கைது
திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் டோல் பிளாசா அருகே வைத்து அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் பிடிபட்டார்.மருத்துவர் ஒருவரிடம் இருந்து லஞ்சம் பெற்று செல்லும் போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்தனர். பிடிபட்டவர் , மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றிய அங்கித் திவாரி ஆவார்.
தலைசிறந்த சிந்தனையாளர்களில் அயோத்திதாச பண்டிதர் குறிப்பிடத்தக்கவர் - முதல்வர்!
தமிழ் சிந்தனை மரபை வளர்த்தெடுத்தவர் அயோத்திதாசப் பண்டிதர். இந்த மணிமண்டபம் அறிவொளி இல்லமாக அமைந்துள்ளது. தமிழ் அல்லது திராவிடம் மொழி மட்டும் அல்ல, அது ஒரு பண்பாட்டு நடைமுறையாக மாற்றியவர். மக்கள் அனைத்து வேற்றுமையையும் மறந்து, ஒன்றாக இருக்க போராடியவர் அயோத்தி தாசர். சாதிய அடுக்கு முறை சமூகத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தலைசிறந்த சிந்தனையாளர்களில் அயோத்திதாச பண்டிதர் குறிப்பிடத்தக்கவர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
60000 டன் பருப்பு வாங்க வேண்டியதன் அவசியம் என்ன? - வானதி சீனிவாசன்!
3 மாதத்திற்கு தேவையான 60000 டன் பருப்பு வாங்க வேண்டியதன் அவசியம் என்ன? என்று தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வளர்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க தடை இல்லை - உச்ச நீதிமன்றம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எதிர்க்கட்சியாக ஒரு பேச்சு, ஆளுங்கட்சியானால் ஒரு பேச்சா? - ராமதாஸ் கேள்வி!
சட்டப் பேரவைச் செயலாளர் சீனிவாசனுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை உடனடியாக ரத்து செய்து, தகுதியும், திறமையும் கொண்ட ஒருவரை சட்டப்பேரவையின் புதிய செயலாளராக நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அயோத்திதாச மணிமண்டபத்தினை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில், திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதர் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் , கடலூர் ,மயிலாடுதுறை, நாகை , தஞ்சாவூர் , திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!
கனமழை, மண் சரிவு காரணமாக 8 நாட்களுக்கு பிறகு குன்னூர்- உதகை அருகே மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
நடிகை சுப்புலட்சுமி காலமானார்!
RIPSubbalakshmi : விண்னைதாண்டி வருவாயா, அம்மணி, பீஸ்ட் போன்ற படங்களில் நடித்த மலையாள நடிகை நடிகை சுப்புலட்சுமி காலமானார். அவருக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
2வது நாளாக போக்குவரத்து முடங்கம்!
சென்னையில் கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் 2வது நாளாக போக்குவரத்து முடங்கி உள்ளது. கனரக மோட்டார்கள் கொண்டு அருகில் உள்ள கால்வாயில் நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதும் இனி ரூ.10க்கு ஆவின் டிலைட்!
ஆவின் டிலைட் 200 மி.லி பாக்கெட் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 14.50 லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மழைநீர் கால்வாயில் கவிழ்ந்த ஆட்டோ!
சென்னை மேடவாக்கம் அடுத்த அரசன்கழனியில் உள்ள மழைநீர் கால்வாயில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் உட்பட 3 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கால்வாயின் ஒரு பகுதி திறந்துவைக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், இது குறித்து விவாதிப்பதற்காக நாளை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
48 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர்!
ராமநாதபுரம் பார்த்திபனூர் மதகணையின் இடது பிரதான கால்வாயில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் செல்வதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், ரூ.52.50 கோடி மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் விருப்ப ஓய்வு!
அடுத்த ஆண்டு மே மாதத்துடன் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், விருப்ப ஓய்வு கேட்டு தமிழ்நாடு டிஜிபியிடம் மனு அளித்திருந்த நிலையில் அவரது மனு ஏற்கப்பட்டு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஷசாங்சாய்க்கு கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.-ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் மீட்பு
செம்பரம்பாக்கம் உபரி நீர் செல்லும் தரைப்பாலம் அருகே சென்ற கார் நீரில் அடித்துச் சொல்லப்பட்டது. இந்நிலையில் காரில் இருந்த மூன்று பேரை போலீசார் கயிறு கட்டி உயிருடன் மீட்டுள்ளனர். முகமது ரிஸ்கான் அவரது மனைவி 10 வயது மகளுடன் காரில் சென்ற போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
பெட்ரோல் மற்றும் டீசல் விலை 559வது நாளாக மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை இன்று (டிசம்பர் 1) லிட்டருக்கு ரூ.102.63, டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்வு
சென்னையில் வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.26.50ஆக உயர்ந்துள்ளது. நவம்பர் 16ல் ரூ.1942க்கு விற்கப்பட்ட வணிக பயன்பாடு சிலிண்டர் தற்போது 1968க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டாபிக்ஸ்