தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: மழை, வெள்ள நிவாரணம் - வெளியானது அரசாணை

Tamil Live News Updates: மழை, வெள்ள நிவாரணம் - வெளியானது அரசாணை

HT Tamil Desk HT Tamil

Dec 13, 2023, 05:53 PM IST

google News
Tamil Live News Updates: இன்றைய (13.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Tamil Live News Updates: இன்றைய (13.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Tamil Live News Updates: இன்றைய (13.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திற்குள் புகுந்த இளைஞர்கள் வீடுகளில் சோதனை

Parliament Attack: நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்திய பட்டதாரி இளைஞர்கள் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மைசூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் வீட்டில் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

2-வது நாளாக ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை

RK Suresh: பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ், 2வது நாளாக ஆஜராகியுள்ளார். ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக ஆர்.கே. சுரேஷிடம் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடந்தது. இன்று போலீசார் கேட்ட ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.

மழை, வெள்ள நிவாரணம் - வெளியானது அரசாணை

Flood 2023: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை, வெள்ள நிவாரணமாக ரூ.6,000 வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு பாஸ் வழங்க தடை

Parliament security scare: நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து நாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு பாஸ் வழங்க தடை விதிக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

மாலை 4 மணி வரை அவை ஒத்திவைப்பு 

Parliament security scare: நாடாளுமன்ற மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தை அடுத்து, மாலை 4 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

Parliament security scare: நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சிவேசனை உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

Parliament security scare: நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் ஜனநாயக விழுமியங்களை அவமதிக்கும் செய்ல். அத்துமீறி எப்படி நுழைந்தனர்? அவர்களின் நோக்கங்கள் என்ன? என்பதை உடனே கண்டறிய வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு - கார்த்தி சிதம்பரம் கண்டனம்

Parliament security scare: 2001 நாடாளுமன்றத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற அதே நாளில் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. இது வேதனைக்குரியது; மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள், சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் மஞ்சள் புகை கிளம்பியது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த மர்மநபர்கள்

Lok Sabha: நாடாளுமன்ற மக்களவை வளாகத்தில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இரண்டு நபர்கள் எம்பிக்களின் இருக்கை மீது குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துமீறி நுழைந்த இரண்டு நபர்களால் மக்களவைக்குள் பதற்றம் ஏற்பட்டது.

முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். 

சிறைவாசிகளுக்கு தொலைபேசி பேச வசதி அதிகரிப்பு

Prison: சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் உயர்த்தி வழங்குவதோடு காணொலி (வீடியோ கால்) தொலைபேசி வசதியினை புதியதாக ஏற்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

Rain Alert: வரும் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை 

மத்திய பிரதேச முதல்வர் பொறுப்பேற்பு

MadhyaPradesh CM: மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவின் மோகன் யாதவ் பொறுப்பேற்றுக் கொண்டார். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்பு 

மத்திய குழு 2வது நாளாக ஆய்வு

Chennai Floods : சென்னை புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் புயல் வெள்ள பாதிப்புகள் குறித்து 2வது நாளாக மத்தியக் குழு ஆய்வு செய்து வருகின்றனர் 

பழைய பல்லவியை புது மெட்டில் பாட தொடங்கி உள்ளார்கள்

Srirangam Temple: ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்த பிரச்னை என்பது பக்தர்களுக்கும், அங்கிருந்த பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல். முதலமைச்சர் அவர்கள் இந்த பிரச்னையை தீர விசாரித்து பிரச்னைக்கு தீர்வு காண உத்தரவிட்டுள்ளார். பக்தர்கள், திருக்கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு அடைந்துவிட்டது. ஊதிஊதி பெரிதாக்கலாம் என நினைத்தவர்கள், சென்னை மழையில் அரசியல் செயல்லாம் என நினைத்தவர்களால் எந்த அரசியலும் செய்ய முடியவில்லை என்பதால் பழைய பல்லவியை புது மெட்டில் பாட தொடங்கி உள்ளார்கள்.  - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்

2001 Parliament Attack: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாத தாக்குதலில் உயிர்நீத்த பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

64,920 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை

ED: வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் இதுவரை ரூ.64,920 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், "2023 பொதுத் துறை வங்கிகளில் பெற்ற கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் எண்ணிக்கை 14,159 ஆக அதிகரித்துள்ளது.

1,105 வங்கிக் கடன் மோசடி வழக்குகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.12) சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ரூ.45,760க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 குறைந்து ரூ.5,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

Silver Rate: சென்னையில் வெள்ளியின் விலை இன்று (டிச.13) கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.77க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.77,000-க்கு விற்பனையாகிறது.

சபரிமலையில் குவியும் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீஸ் 

Sabarimalai: சபரிமலையில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

போதிய அளவில் போலீஸ் இல்லாததால், சரிவர சாமி தரிசனம் செய்ய முடியவில்லை என பக்தர்கள் புகார்.

முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சன்னிதானம் வரை செல்ல முடியாமல் திரும்பும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

குமுளியில் கடும் பனிமூட்டம்

Kumuli Fog: தமிழக-கேரள எல்லை பகுதியான குமுளி, தேக்கடி பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் அவதி

கொப்பரைத் தேங்காயை அரசே விற்க வேண்டும் - வைகோ

Vaiko: கொப்பரைத் தேங்காயைப் பதப்படுத்தி, பொதுமக்களுக்கு விற்பனை செய்ய, ‘பாரத் தேங்காய் எண்ணெய்’ என அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என இந்திய தென்னை விவசாய சங்கங்கள் சார்பில் வலியுறுத்துகிறேன். இதன் மூலம், இடைத்தரகர்களை அகற்றி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவர் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் கோரிக்கை

போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்

Israel Vs Hamas War: காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவித்தல், மனிதாபிமான அணுகலை உறுதி செய்தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

இந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாகவும்; 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன; 23 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை

ஆர்.கே.சுரேஷ் இன்று மீண்டும் ஆஜர்

Aarudra Scam: ஆரூத்ரா பண மோசடி வழக்கில் நடிகரும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் இன்று இரண்டாம் முறையாக ஆஜர் ஆகிறார்.

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு விசாரணை

Governor Vs TN Govt: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம் என அறிவிக்க கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு மீது இன்று விசாரணை.

அரையாண்டு தேர்வுகள் இன்று தொடக்கம்

Half Yearly Exam: தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் இன்று தொடக்கம்.

3 மாவட்டங்களில் மத்தியக் குழு இன்று ஆய்வு

Chennai Floods 2023: வெள்ளம் பாதித்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மத்தியகுழு இன்று ஆய்வு.

2 மாநில முதல்வர்கள் இன்று பொறுப்பேற்பு

BJP CM: மத்திய பிரதேச முதலமைச்சராக மோகன் யாதவும், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தியோ சாயும் இன்று பதவி ஏற்கின்றனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி