Tamil Live News Updates: 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்!
Dec 09, 2023, 06:53 PM IST
Tamil Live News Updates: இன்றைய (09.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
கரண்ட் பில் கட்ட ஃபைன் இல்லாத காலநீட்டிப்பு அனைவருக்கும் பொருந்தும் என அறிவிப்பு!
Electricity Bill: மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட காலநீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்!
cyclone: கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள மாலத்தீவுப் பகுதிகளில் வளிமண்டல அடுக்குச் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும். இதன்காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, புதுச்சேரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு மழைபெய்ய வாய்ப்புள்ளது.
மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை கூட்டி அறிவிப்பு!
cyclone: புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி அறிவித்தார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகையாக தலா ரூ.6ஆயிரம் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் என முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4 மாவட்டங்களில் மீண்டும் கல்லூரி திறப்பு!
cyclone: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் வரும் டிசம்பர் 11 அன்று, திங்கட்கிழமை கல்லூரிகள் திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. சென்னையில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு வண்டிகள் பழுது நீங்க குவிப்பு!
Royal Enfield: சென்னை பள்ளிக்கரணையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் பழுதை சரிசெய்ய ராயல் என்ஃபீல்டு ஷோரூமில் நூற்றுக்கணக்கான புல்லட் பைக்குகள் குவிந்துள்ளன.
"ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று நோக்குகிறது"
PM Modi: ஒட்டுமொத்த உலகமும் இன்று இந்தியாவை எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் உற்றுநோக்கி கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பேசுகிறது. இதுதொடர்பாக, இன்ஃபினிட்டி ஃபோரம் எனப்படும் சர்வதேச நிதிச் சேவை மையங்களின் ஆணைய அமைப்பு 2.0 நிகழ்வில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
"மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக அதிகாரிகளை முறையாக நியமிக்கவில்லை" - ஈபிஎஸ்
Edappadi Palanisamy: புயல் பாதிப்பு தொடர்பாக திமுக ஆட்சியில் முன்கூட்டியே அலுவலர்கள் நியமனம் செய்யப்படவில்லை; மண்டல வாரியாக முறையாக அதிகாரிகளை நியமித்து ஆலோசனைகளை அரசு வழங்கவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பழம்பெரும் நடிகை லீலாவதி மறைவு!
பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி தனது 85ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு உட்பட 600க்கும் மேற்பட்ட மொழித் திரைப்படங்களில் நடிகை லீலாவதி நடித்திருக்கிறார்.
மிக்ஜாம் புயல் நிவாரண நிதி ரூ.1 கோடி அளிப்பு:
Cyclone Michaung: மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை பிஎஸ்ஜி குழும நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினர். இந்நிகழ்வில் பிஎஸ்ஜி குழுமத்தின் லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடேட் நிறுவனர் ராஜீவ் கார்த்திகேயன் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
நடிகர் கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் புதிய அப்டேட்!
Kavin: நடிகர் கவின் நடிக்கும் புதிய படம், ஸ்டார். இப்படத்தின் முதல் பாடல் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஒட்டி, வரும் 12ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விசிக சார்பில் 10 லட்சம் நிவாரணம்
Chennai Floods 2023: மிக்ஜாம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு விசிக தலைவர் திருமாவளவன் ரூ.10 லட்சம் வழங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தையும் வழங்கியுள்ளனர்.
16 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
Rain Alert: தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களின் இன்று கனமழை எச்சரிக்கை
முதலமைச்சர் ஆலோசனை
MK Stalin Meeting: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு. மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்பு
எண்ணெய் கசிவு - பசுமைத் தீர்ப்பாயம் விசாரணை
Chennai Floods: எர்ணாவூர் கச்சா எண்ணெய் கசிவு சம்பவம் தொடர்பாக பசுமை தீர்பாயம் தாமக முன் வந்து விசாரணை. எண்ணெய் கசிவு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குழு அமைத்துள்ளதாக தமிழக அரசு விளக்கம். தங்கள் குழாய்களில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறவில்லை என சிபிசில் நிறுவனம் விளக்கம்.
புயல் பாதித்த மக்களுக்கு ஈபிஎஸ் உதவி!
Chennai Floods: சென்னை துறைமுகம் பகுதியில் புயல் பாதித்த மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கருக்கா வினோத்தை விசாரிக்க என்.ஐ.ஏ மனு
NIA: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ மனுத்தாக்கல்
இன்றைய தங்கம் விலை நிலவரம்
Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.09) சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ரூ.46,120க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.5,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
Silver Rate: சென்னையில் வெள்ளியின் விலை இன்று (டிச.9) கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.78க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.78,000-க்கு விற்பனையாகிறது.
போலி சுங்கச் சாவடி அமைத்து கோடிக்கணக்கில் மோசடி
Fake TollGate: குஜராத்தில் போலி சுங்கச் சாவடி அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் மக்களை ஏமாற்றி ரூபாய் 75 கோடி மோசடி செய்திருப்பது அம்பலம்.
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் போலி சுங்கச் சாவடி அமைத்து, அதற்கு தனியாக சாலை வசதி ஏற்படுத்தி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை பாதை மாற்றி விட்டுள்ளனர்.
அப்பாதையில் உள்ள வர்கசியா சுங்கச் சாவடி கட்டணத்தில் 50% மட்டுமே இங்கு வசூல் செய்யப்பட்டு வந்ததால், இதுகுறித்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை.
நெடுஞ்சாலையில் இருந்து வாகனங்கள் திருப்பி விடப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடந்த ஆய்வில் உண்மை அம்பலமானது. தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு.
சோனியாவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து
Sonia Gandhi Birthday: சோனியா காந்தி நீண்ட ஆயுள் உடன் ஆரோக்கியமாக வாழ இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்
24 மணி நேர ஆவின் பாலகங்கள்!
Aavin Milk: சென்னையில் இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கும் ஆவின் பாலகங்கள் எட்டு இடங்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
கோவையில் 10 செ.மீ மழை பதிவு
Rain: கோவை, தேனி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்த நிலையில் கோவையில் மட்டும் 10 செ.மீ மழை பதிவு.
மகளிர் ஐபிஎல் போட்டி! இன்று ஏலம்
Women IPL: வரும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடக்க உள்ள மகளிர் ஐபிஎல் தொடருக்கான வீராங்கணைகள் ஏலம் மும்பையில் இன்று நடைபெறுகிறது.
சதம் அடித்த சின்ன வெங்காயம் விலை
Today Vegetable Price: தொடர் கனமழைக்கு பிறகு சென்னையில் இயல்புநிலை திரும்பி வரும் நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை 100 ரூபாய் கடந்தும், பெரிய வெங்காயத்தின் விலை 50 ரூபாயை கடந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
School Holiday: தொடர் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
தூத்துக்குடி, திருச்செந்தூரில் விடுமுறை
School Holiday: தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
ஆளுநர் மாளிகையில் என்.ஐ.ஏ விசாரணை
NIA: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
Schlool Holiday: தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 9) விடுமுறை அறிவிப்பு
டாபிக்ஸ்