தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Tamil Live News Updates: நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

HT Tamil Desk HT Tamil

Dec 07, 2023, 06:05 PM IST

google News
Tamil Live News Updates: இன்றைய (07.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Tamil Live News Updates: இன்றைய (07.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Tamil Live News Updates: இன்றைய (07.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

மீட்பு பணிகளில்் முன்னேற்றம் - தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா

சென்னையில் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இதில், "கடந்த 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில பகுதிகளைத் தவிர, 95% சரி செய்யப்பட்டுள்ளது. 18,780 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்

343 இடங்களில் தண்ணீர் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.

 

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை

 

மிக்ஜாம் புயல் பாதிப்பு பகுதிகளி் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

 

சாட் ஜிபிடிக்கு போட்டியாக ஜெமினி செயற்கை நுண்ணறிவு சேவை - கூகுள் அறிமுகம்

 

வெள்ளத்தில் சிக்கி உயிரழந்த டெலிவரி ஊழியர் உடல் 3 நாள்களுக்கு பிறகு மீட்பு

 

பள்ளிக்கரணை பகுதியில் கடந்த 4ஆம் தேதி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த டெலிவரி ஊழியர் முருகன் சடலம் இன்று மீட்கப்பட்டது. நிவாரண முகாமில் இருந்த அவர், தந்தையை பார்த்துவிட்டு திரும்பும்போது நீரில் சிக்கி உயிரிழந்துள்ளார்

 

டி20 உலகக் கோப்பைக்கனை இலச்சினை வெளியீடு

 

2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இலச்சினையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடரும், பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்திலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன

 

முக்கிய ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு 

 

செங்கல்பட்டில் இருந்து தெலங்கானாவின் காச்சிகுடா செல்லும் விரைவு ரயில் முழுவதும் ரத்து.

மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று சென்ட்ரல் வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி

 

தெலங்கானா மாநில புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் ரேவந்த் ரெட்டி. ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதிவிப்பிரமாணம் செய்து வைத்தார்


தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

தமிழகத்திற்கு ரூ.450 கோடி - மத்திய அரசு அறிவிப்பு

Chennai Floods: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.450 கோடி வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ரூ.5,060 கோடி வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரியிருந்த நிலையில் முதற்கட்டமாக ரூ.450 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

Chennai Rains: சென்னையில் மிக்ஜாம் மழை பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து வருகிறார்.

முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர்

Chennai Rains 2023: சென்னை மழை வெள்ள பாதிப்பு, மீட்பு பணி குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்தார் பிரதமர். தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக தகவல் .

கோவை நகைக்கடை கொள்ளையரின் தந்தை தற்கொலை

Crime: கோவை நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய்யின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புழல் ஏரியின் கரை உடையும் அபாயம்

Puzhal Lake: தொடர் கனமழை காரணமாக புழல் ஏரி நிரம்பி வழிவதால் அதன் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புழல் ஏரி சுற்றுச்சுவரின் ஒருபகுதி சாலையில் சரிந்து விழுந்துள்ளது. சுற்றுச்சுவர் சரிந்து விழுந்த சாலையும் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பணிக்கு திரும்பிய மீனவர்கள்!

Chengalpattu: செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் சுற்றுப்புற மீனவர்கள் மிக்ஜாம் புயலால் கடந்த 6 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாத நிலையில், இன்று மீண்டும் பணிக்கு திரும்பினர்.

சென்னையில் பனிமூட்டம்

Chennai Airport: சென்னையில் பனிமூட்டம் நிலவுவதால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, கோவை, கொல்கத்தார் புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சனாதன வழக்கு!

Sanatana Dharma Case: சனாதன தர்மத்துக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, எழுத்துப்பூர்வமான வாதங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இந்த வழக்கு இன்று பட்டியலிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜி டிஸ்சார்ஜ்

Minister Senthil Balaji: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நவ.15ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை டிஸ்சார்ஜ் ஆனார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சென்னை மாநகர பேருந்துகள் இயக்கம் சீரானது

Chennai: சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மாநகர பேருந்து இயக்கம் சீரானது. மொத்தமுள்ள 603 வழிதடங்களிலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் முழுமையாக வடிந்துவிட்ட நிலையில் மாநகரப் பேருந்துகளின் இயக்கம் சீராகியுள்ளது. வழக்கமாக நாளொன்றுக்கு 2600 பேருந்துகள் சராசரியாக இயக்கப்படும் நிலையில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கம்போல் பேருந்து சேவை அளிக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

தெலங்கானா முதல்வர் இன்று பதவி ஏற்பு

Telangana Elections 2023:தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று பதவி ஏற்கிறார். பதவியேற்வு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

WIvENG: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று உள்ளன.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Petrol, Diesel price: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி