தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Suspicious Death : விஜய காந்திற்கு டூப் போட்டவர் பிணமாக மீட்பு

Suspicious Death : விஜய காந்திற்கு டூப் போட்டவர் பிணமாக மீட்பு

Jan 26, 2023, 09:35 AM IST

google News
சினிமாவில் விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுக்கு சண்டை காட்சிகளில் டூப் போட்டவர் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுக்கு சண்டை காட்சிகளில் டூப் போட்டவர் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுக்கு சண்டை காட்சிகளில் டூப் போட்டவர் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்த் உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு டூப் போட்ட சண்டை கலைஞர் பூட்டியிருத்த வீட்டில் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் சென்னையில் எண்ணூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் 116வது பிளாக்கில் மணி என்ற டூப் மணி வசித்து வந்தார். அவருக்கு வயது 55. இவர் திரையில் பல முன்னணி நடிகர்களுக்கு டூப் போட்டு நடித்து வந்தார்.
நடிகர் விஜயகாந்தின் புலன் விசாரணையில் அவரருக் டூப் போட்டு நடித்தவர் மணி. இது போன்று பல படங்களில் இவர் டூப் போட்டு நடித்து வந்தார். இதற்கிடையே மணி குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதே சமயம் மணி அதிக குடிப்பழக்கம் உடையவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தன் வீட்டிற்கு சென்ற மணி அதன் பிறகு கதவை பூட்டி உள்ளார். அதன் பின் கதவை திறக்கவே இல்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கி உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் காவல்துறையினர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மணி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவர் உயிரிழந்து 3 நாட்கள் கடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல் துறையினர் மணியின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் மணி அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்தாரா அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணத்தில் தங்கள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி